மேலும் செய்திகள்
தெரு நாய்கள் அல்ல.... சமூக நாய்கள்....
8 minutes ago
செங்கோட்டையன் கருத்துக்கு மதுரையில் பழனிசாமி பதில்
47 minutes ago
திருநெல்வேலி: செங்கோட்டையன் பின்னால் பா.ஜ., இருந்தால் த.வெ.க.,விற்கு ஏன் செல்லவேண்டும் என பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பினார். திருநெல்வேலியில் செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியதாவது: 1977ம் ஆண்டு முதல் தொடர்ந்து எம்.எல்.ஏ.,வாகவும், அமைச்சராகவும் பணியாற்றியவர் செங்கோட்டையன். அ.தி.மு.க.,விற்கு தனி ஓட்டு வங்கி உள்ளது. அதிலிருந்து பிரிந்து சென்றால், அந்த ஓட்டு வங்கி அவர்களுக்கு சேருமா என்பது தேர்தலில் தான் தெரியும். அ.தி.மு.க.,-பா.ஜ., கூட்டணிக்கு எந்த பாதிப்பும் இல்லை. மக்கள் ஆதரவு அதிகமாக உள்ளது. யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை வாக்காளர்களே தீர்மானிப்பார்கள். தி.மு.க., ஆட்சியில் சொத்துவரி, மின்சார கட்டணம் மூன்று மடங்கு உயர்ந்துள்ளது. பொங்கலுக்கு பொதுமக்களுக்கு ரூ. 5000 தமிழக அரசு வழங்குவது தேர்தல் நோக்கத்தில்தான். மக்கள் அதை ஏற்றுக்கொள்வார்களா என்பது கேள்விக்குறி. பா.ஜ., யாருக்கும் வாக்குறுதி அளிக்கவில்லை. செங்கோட்டையன் ஏற்கனவே விளக்கம் அளித்துவிட்டார். ஜன., 15க்குள் அனைவரும் ஒருங்கிணைக்கப்படுவர். உலகத்தை ஆளக்கூடிய கட்சியாக பா.ஜ., வளர்ந்துள்ளது. விஜய் தற்போது நடிகராகவே உள்ளார். கட்சி தொடங்கியவுடன் “லாங் ஜம்ப், ஹை ஜம்ப்” என உலகத்தை தாண்டுவோம் எனச் சொல்வது பொருத்தமில்லை. ஒரு தேர்தலில் நின்று தனது பலத்தை நிரூபிக்கட்டும். எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவராக கட்சி தொடங்கினார்; விஜய் நடிகராக தான் கட்சி தொடங்கியுள்ளார். செங்கோட்டையன் பின்னால் பா.ஜ., இருந்தால் அவர் த.வெ.க.,விற்கு செல்ல வேண்டிய அவசியமே இல்லை. அ.தி.மு.க., உள்கட்சி பிரச்னைகள் குறித்து நான் கருத்து சொல்ல மாட்டேன். மூன்றாவது, நான்காவது அணி உருவானாலும், 2026 தேர்தலில் அ.தி.மு.க.,-பா.ஜ., கூட்டணியே ஆட்சியைப் பிடிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
8 minutes ago
47 minutes ago