உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஓவர்லோடு இடங்களில் கூடுதலாக மின் சாதனம் நிறுவ அறிவுறுத்தல்

ஓவர்லோடு இடங்களில் கூடுதலாக மின் சாதனம் நிறுவ அறிவுறுத்தல்

சென்னை: தமிழக மின்வாரியம், கேபிள், கம்பம், மின்கம்பி, டிரான்ஸ்பார்மர், மின் வினியோகப் பெட்டி போன்ற சாதனங்கள் உதவியுடன் மின் வினியோகம் செய்கிறது. கோடைக் காலத்தில் மின்தேவை அதிகமாக இருக்கும்.அப்போது, அனைத்து மின் சாதனங்களிலும் முழு திறனுக்கு மின்சாரம் செல்லும். அதை விட அதிக மின்சாரம் எடுத்துசெல்லப்படும் போது, 'ஓவர்லோடு' ஏற்பட்டு பழுதாகின்றன.இதனால், மின் வினியோகம் பாதிக்கப்படுகிறது; 2022 - 23ல், பல்வேறு திறன்களில், 10,693 மின் வினியோக டிரான்ஸ்பார்மர்கள் பழுதாகியுள்ளன. வரும் மார்ச் முதல் கோடைக் காலம்துவங்குகிறது. எனவே, மின் சாதனங்களில் பழுது ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 'ஓவர்லோடு' ஏற்படும் இடங்களை கண்டறிந்து, கூடுதல் டிரான்ஸ்பார்மர், மின் வினியோக பெட்டி உள்ளிட்ட சாதனங்களை நிறுவுமாறு பொறியாளர்களை, மின்வாரியம்அறிவுறுத்தியுள்ளது.மேலும், வெயில் காரணமாக, 'சாக்' எனப்படும் தொய்வு ஏற்பட்டு மின்கம்பி தாழ்வாக தொங்குவதை தவிர்க்க, சரியான உயரத்திற்கு இழுத்துக் கட்டுமாறும் தெரிவித்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி