உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வேதகிரீஸ்வரர் தீர்த்தகுளத்தில் அதிசயம் 12 ஆண்டுகளுக்கு பின் தோன்றிய சங்கு திருக்கழுக்குன்றத்தில் பக்தர்கள் பரவசம்

வேதகிரீஸ்வரர் தீர்த்தகுளத்தில் அதிசயம் 12 ஆண்டுகளுக்கு பின் தோன்றிய சங்கு திருக்கழுக்குன்றத்தில் பக்தர்கள் பரவசம்

மாமல்லபுரம்:திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில், வேதங்கள் மலைக்குன்றுகளாக வீற்று, உச்சியில் சிவபெருமான், வேதகிரீஸ்வரர் சுயம்பு மலைக்கொழுந்தாக கோவில் கொண்டுள்ளார். அம்பாள் திரிபுரசுந்தரி, அடிவாரத்தில் உள்ள பக்தவத்சலேஸ்வரர் கோவிலில் வீற்றுள்ளார்.உப்புத் தன்மையுள்ள கடல்நீரில் மட்டுமே தோன்றும் இயல்புடைய சங்கு, சங்குதீர்த்தகுள நன்னீரிலும், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றுவது குறிப்பிடத்தக்கது.

எதிர்பார்ப்பு

கடந்த 1939, 1952, 1976, 1988, 1999 ஆகிய ஆண்டுகளில், இக்குளத்தில் தோன்றிய சங்குகள், கோவில் நிர்வாகம் சார்பில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.அதில், மிகவும் பழமையான சங்கு, மார்க்கண்டேயர் காலத்தைச் சேர்ந்ததாகவும் கருதப்படுகிறது. கார்த்திகை மாத 1,008 சங்காபிஷேக உற்சவத்தில், குளத்தில் தோன்றிய சங்குகளில், சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்படும்.கடந்த 2011 செப்., 1ம் தேதி, குளத்தில் சங்கு தோன்றி, 12 ஆண்டுகள் கடந்தது. தற்போது, சங்கு தோன்ற வாய்ப்புள்ளதாக பக்தர்கள் எதிர்பார்த்தனர்.நேற்று, குளத்தில் புனித சங்கு தோன்றி, பக்தர்களை பரவசப்படுத்தியது. இதற்கு முன், சில சங்குகள் தோன்றியபோது மிகுந்த ஓசையுடன் மிதந்ததாக, முன்னோர் தெரிவித்துள்ளனர். நேற்று தோன்றிய சங்கு, ஓசை ஏற்படுத்தவில்லை.

மிதந்தது

காலை 9:00 மணிக்கு, குளத்தின் மேற்கு கரை படிகளை ஒட்டி, தீர்த்தகிரீஸ்வரர் கோவில் பின்புறம், கொடிகள் வேக அசைவுடன் இருந்ததை, சிலர் கண்டனர்.கொடி அசைவை அறிவதற்காக அவற்றை அகற்றியபோது, அங்கு சங்கு மிதந்ததை கண்டு ஆச்சரியப்பட்டனர். இதுகுறித்து, கோவில் நிர்வாகத்திடம் தெரிவித்தனர்.கோவில் நிர்வாகத்தினர், சிவாச்சாரியார்களுடன் விரைந்து சென்று, குளத்தில் மிதந்த சங்கை, 9:30 மணிக்கு மீட்டனர்.மாசி மண்டபத்தில், அதற்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. சங்கு தோன்றியதை அறிந்து, மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலிருந்து திரண்ட பக்தர்கள், அதை பரவசத்துடன் தரிசித்து வணங்கினர்.கலெக்டர் அருண்ராஜ் மற்றும் வருவாய்த் துறையினர், அறநிலையத்துறை இணை ஆணையர் வான்மதி உள்ளிட்டோர் பார்வையிட்டு வணங்கினர்.மாலையில், மங்கல வாத்திய முழக்கத்துடன், அதை மாடவீதிகள் வழியே கோவிலுக்கு கொண்டு சென்று வழிபட்டு பாதுகாப்பாக வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை