மேலும் செய்திகள்
காங்கிரசில் இன்று முதல் விருப்ப மனு
14 minutes ago
சென்னை: தமிழகத்தில், இன்று முதல் ஆறு நாட்களுக்கு லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த மையத்தின் அறிக்கை:
தென் மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஒருசில இடங்கள், காரைக்காலில், இன்று காலை வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகம், புதுச்சேரியில் இன்று முதல் ஆறு நாட்கள் அதாவது, வரும், 15 வரை லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும்; ஒருசில இடங்களில், லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
14 minutes ago