உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  தி.மு.க.,வுக்கு மக்கள் பாடம் புகட்டுவர்: விஸ்வ ஹிந்து பரிஷத் சாபம்

 தி.மு.க.,வுக்கு மக்கள் பாடம் புகட்டுவர்: விஸ்வ ஹிந்து பரிஷத் சாபம்

மதுரை: விஸ்வ ஹிந்து பரிஷத் மாநில இணை பொதுச்செயலர் சந்திரசேகரன் அளித்த பேட்டி: தமிழக அரசின் தொல்லியல் துறை ஆவணங்களில் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்துாணில் தீபம் ஏற்றியதற்கான ஆதாரங்கள் உள்ளன. அதை நில அளவை கல் என தி.மு.க., - எம்.பி., கனிமொழி கூறிவந்தார். அது இப்போது பொய் என நிரூபிக்கப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில், உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பின்பும், தீபத்துாணில் தீபம் ஏற்ற அனுமதி மறுத்த தி.மு.க., அரசுக்கு, சட்டசபை தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவர். ஹிந்து விரோத போக்கில் தி.மு.க., அரசு ஈடுபட்டு வருகிறது. தீபத்துாணில் தீபம் ஏற்ற வேண்டும் என திருப்பரங்குன்றத்தில் இருக்கும் அனைத்து மதங்களைச் சேர்ந்தவர்களும், மதுரை கலெக்டரிடம் மனு கொடுத்து வருகின்றனர். திருப்பரங்குன்றம் மலையில் இருக்கும் தீபத்துாணில் தீபம் ஏற்றுவதில் யாருக்கும் ஆட்சேபனை இல்லை. இதை புரிந்து கொண்டாவது, தீபத்துாணில் தீபம் ஏற்ற தி.மு.க., அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

பிரேம்ஜி
டிச 10, 2025 08:00

இந்துக்கள் சகிப்புத்தன்மை மிக்கவர்கள்! இதெல்லாம் மறந்து மன்னித்து விடுவார்கள்! ஊழல், பிராடுத்தனம் இதெல்லாம் மனித இயற்கை என்பவர்கள்!


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை