உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கட்டடத்தின் மதிப்பை காண்பிக்காத எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள்; செலவிடப்பட்ட நிதியை எழுதுவதில் தயக்கம்

கட்டடத்தின் மதிப்பை காண்பிக்காத எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள்; செலவிடப்பட்ட நிதியை எழுதுவதில் தயக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

காஞ்சிபுரம்:தொகுதியில் உள்ள அடிப்படை பிரச்னைகளான குடிநீர், சாலை, கட்டடம் போன்ற பல்வேறு மக்கள் நல கோரிக்கைகளை, எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ., தொகுதி நிதியிலிருந்து மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக எம்.பி.,க்களுக்கு 5 கோடி ரூபாயும், எம்.எல்.ஏ.,க்களுக்கு 3 கோடி ரூபாயும், மத்திய - மாநில அரசுகள், தொகுதி மேம்பாட்டு நிதியாக ஒதுக்கீடு செய்கிறது.இந்த நிதியில் மேற்கொள்ளப்படும் கட்டடம் அல்லது பிற திட்டங்களில், எவ்வளவு ரூபாய் மதிப்பில் கட்டடம் கட்டப்பட்டது எனக் குறிப்பிடுவது வழக்கம். கட்டடத்தின் கல்வெட்டில் திட்ட மதிப்பு எழுதப்பட வேண்டும்.ஆனால், காஞ்சிபுரம் மாவட்டத்தில், சமீப காலமாக, எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.,க்களின் தொகுதி நிதியில் கட்டப்படும் கட்டடங்களின் மீது, திட்ட மதிப்பு எவ்வளவு எனக் குறிப்பிடுவதில்லை. இவற்றை கண்காணிக்க வேண்டிய மாவட்ட நிர்வாகமும் கண்டுகொள்ளாமல் உள்ளது. புதிய கட்டடத்திற்கு செலவிடப்பட்ட நிதி பற்றி, பொதுமக்கள் விமர்சனம் செய்வர் என்பதற்காக, சமீப காலமாக திட்ட மதிப்பு பற்றி குறிப்பிடுவதில்லை என, அரசியல் கட்சியினரே கருத்து தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை