மேலும் செய்திகள்
தெரு நாய்கள் அல்ல.... சமூக நாய்கள்....
12 minutes ago
செங்கோட்டையன் கருத்துக்கு மதுரையில் பழனிசாமி பதில்
51 minutes ago
காரைக்குடி: காரைக்குடியில் நடந்த மாவீரர் நாள் பொதுக்கூட்டத்தில் சிவகங்கை மாவட்ட சட்டசபை தொகுதி வேட்பாளர்கள் அறிவித்த, சீமான் காரைக்குடி தொகுதியை அறிவிக்காமல் சஸ்பென்சாக விட்டுச் சென்றார். காரைக்குடியில் நாம் தமிழர் கட்சி சார்பில், மாவீரர் நாள் 2025, ஈகியர் நினைவேந்தல் பொதுக்கூட்டம் நடந்தது. கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையேற்று பேசியாதவது: கள்ளச்சாராயம் குடித்து இறந்தால் ரூ.10 லட்சம். மீனவர்கள் சுட்டு கொல்லப்பட்டால் ஒரு ரூபாய் கூட இல்லை. வரும் பொங்கலுக்கு ரூ. 3 ஆயிரம் வழங்குவார்கள். தேர்தல் நெருங்குவதால் ரூ.5 ஆயிரம் கூட வழங்குவார்கள். எங்களுக்கு எப்போதும் நேரடி அரசியல் தான். துாண்டிலில் மாட்டிய மீன் போல, திராவிடர் மத்தியில், தமிழர்கள் மாட்டியுள்ளனர். எங்கள் தலைவர் பிரபாகரன் பொழுதுபோக்கு தளத்தில் ஆடியவர் அல்ல. எப்.ஐ.ஆர்., க்கு பயந்து ஓடியவர் அல்ல. குறுக்கே அணில் ஓடுகிறதா. உனது பொறுமையாலும், பெருந்தன்மையாலும் வென்று காட்டு. இன்னும் 4 மாதம் தான் உள்ளது. நாம் தமிழர் கட்சிக்கு 4 லட்சமாக இருந்த ஓட்டு, 40 லட்சமாக உயர்த்துள்ளது. மாடுகள் மாநாடு, மலைக்கும் ஆறுக்கும் மாநாடு என்றால் சிரிக்கிறார்கள். மொழியால் பிரிந்தோம். பிரிந்ததை மீண்டும் புதுப்பிக்க வேண்டும். என்னை பிரபாகரன் மான்கறி ஊறுகாய் சாப்பிட சொன்னார். நான் தயங்கினேன். சாப்பிடவே பயப்படுவதாக அவர் தெரிவித்ததால், நான் சாப்பிட்டேன். ஒவ்வொரு தேர்தலும் நமக்கு போர்க்களம். வருகின்ற தேர்தல் மிக முக்கியம். திருச்சியில் பிப்., 7ம் தேதி நாம் தமிழர் கட்சி சார்பில் மாநாடு நடக்கிறது. அங்கு 234 வேட்பாளார்களை ஒரே மேடையில் அறிவிப்போம். அதில் 117 ஆண், 177 பெண் வேட்பாளர்கள். தமிழகத்தில் தனித்து போட்டியிடும் ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி. உறுதியாக வெல்வோம். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் களாக திருப்பத்துார் தொகுதியில், ரம்யா. மானாமதுரை தொகுதி யில் சண்முகப்ரியா, சிவகங்கை தொகுதியில் இந்துஜா போட்டியிடுவார்கள் என்றார். ஆனால் காரைக்குடி தொகுதிக்கு வேட் பாளரை அறிவிக்கா மல் சஸ்பென்சாக வைத்தார்.
12 minutes ago
51 minutes ago