உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சட்டம் ஒழுங்கை காக்க முடியாவிட்டால் பதவி விலக வேண்டும்: தி.மு.க.,வுக்கு அன்புமணி வலியுறுத்தல்

சட்டம் ஒழுங்கை காக்க முடியாவிட்டால் பதவி விலக வேண்டும்: தி.மு.க.,வுக்கு அன்புமணி வலியுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'சட்டம் ஒழுங்கை காக்க முடியாவிட்டால் தி.மு.க., அரசு பதவி விலக வேண்டும்' என பா.ம.க., தலைவர் அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில், அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் ஒரே நாளில் 3 அரசியல் படுகொலைகள் நடந்துள்ளன. சட்டம் ஒழுங்கை காக்க முடியாவிட்டால் தி.மு.க., அரசு பதவி விலக வேண்டும். படுகொலை செய்யப்பட்டவர்கள் அனைவருமே முன்விரோதம் காரணமாகத் தான் படுகொலை செய்யப்பட்டார்கள் என்று கூறி போலீசார் கடமையை தட்டிக்கழிக்கக் கூடாது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=g05an1sx&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கொல்லப்பட்ட மூவருக்குமே முன்விரோதம் இருந்திருக்கிறது என்பது உண்மை தான். அரசியலில் இருக்கும் ஒருவருக்கு எவருடனாவது முன்விரோதம் இருந்தால், அவரது உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்று தான் பொருள் ஆகும். அதனால், அவர்களுக்கான பாதுகாப்பு அச்சுறுத்தல்களை ஆய்வு செய்து, அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டும். ஆனால், அதை செய்ய போலீசார் தவறி விட்டனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் தலையாயக் கடமை சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது தான். ஆனால், எந்த அச்சமும் இல்லாமல் குற்றவாளிகள் நடமாடுகின்றனர். சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என்று ஆணையிட வேண்டும். அதை செய்ய முடியா விட்டால், தமிழகத்தில் கடந்த இரு மாதங்களில் நடந்த அரசியல் படுகொலைகளுக்கு பொறுப்பேற்று தமிழக அரசு பதவி விலக வேண்டும். இவ்வாறு அன்புமணி கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Chandravadhanam Rengaraju
ஜூலை 29, 2024 16:47

சூப்பர்.... உங்க யோசனை பெஸ்ட்.அப்படியே ஆகட்டும்.


Lakshminarayanan
ஜூலை 29, 2024 15:56

அந்தக் காலத்தில் மக்களின் ஜாதி வெறியை மூலதனமாக்கி தமிழ்நாட்டையே ரத்தக்களரி ஆக்கிய ஒரு கட்சி இருந்தது


Anantharaman Srinivasan
ஜூலை 29, 2024 15:02

உட்கார்ந்தயிடத்திலிருந்து அறிக்கை விடுவது ஈசி. இதே திமுக கூட்டணியிருந்தால் இந்த மாதிரி அறிக்கை வருமா? வேண்டாதவன் கை பட்டால் குற்றம் கால் பட்டால் குற்றம். அன்புமணியின் ஒருதலை ஒலம்.


Santhakumar Srinivasalu
ஜூலை 29, 2024 14:09

வன்னியர் போராட்டம் பேர்ல மரங்களை வெட்டி ரோட்டில் போட்டு எத்தனை பேர் உயிரை காவு குடுத்த உன் அப்பாவுக்கும் உனக்கும் என்ன தணடனை கொடுக்கலாம்?


Ramamurthy N
ஜூலை 29, 2024 14:04

திரு அன்புமணி அவர்களே முதலில் உங்கள் அடுத்த வீட்டில் என்ன நடக்கிறது என்று ஏதாவது தெரியுமா? முதலில் குடும்பத்தில் இருப்பவர்கள் இவ்வாறு மிரட்டல் வருகிறது என்று காவல்துறையிடம் தெரிவித்தால் தானே நடவடிக்கை எடுக்க இயலும். தற்போது உண்மையாகவே காவல்துறையினர் இரவு முழுவதும் ரோந்து பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மக்கள் மனமாறவேண்டும். வெட்டுக்கு வெட்டு தான் பரிகாரம் என்பதனை கைவிடவேண்டும். இவ்வாறு ஏதேனும் போன்கால் வந்தால் காவல்துறையை அழைத்து பாதுகாப்பு தேடலாமே?


தஞ்சை மன்னர்
ஜூலை 29, 2024 12:08

அப்படி பார்த்தால் உங்களையும் உங்க அப்பாவையும் தான் முதலில் கைது செய்யவேண்டி வரும்


Senthil K
ஜூலை 29, 2024 14:24

ஓ.. தென் ஆப்ரிக்காவில் இருந்து வந்த களப்பிரங்க.. தொல்லை தாங்க முடியல... பாஸ்...


Senthil K
ஜூலை 29, 2024 14:26

எல்லாம் காலக் கொடுமை..


தஞ்சை மன்னர்
ஜூலை 29, 2024 16:27

வக்காலத்து வாங்கிக்கொண்டு போட்டு இருக்கும்


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை