உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  முதல்வருக்கு தலைசுற்றல் அதிகமாகும்: பா.ஜ., சாபம்

 முதல்வருக்கு தலைசுற்றல் அதிகமாகும்: பா.ஜ., சாபம்

சென்னை: ''மத்திய அரசு, பழங்குடியின மக்களுக்கு ஒதுக்கும் நிதியை, தி.மு.க., அரசு வேறு பணிகளுக்கு ஒதுக்குவது தவறானது,'' என, தமிழக பா.ஜ., தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தெரிவித்தார். அவர் அளித்த பேட்டி: மத்திய அரசு, தமிழகம் உட்பட பல மாநிலங்களில் உள்ள பழங்குடியின மக்களுக்காக, பல நிதியுதவி திட்டங்களை வழங்குகிறது. ஆனால் மாநில அரசு, அதை மக்களிடம் சென்று சேர்ப்பதில்லை. பழங்குடியின மக்களுக்காக, மத்திய அரசு ஒதுக்கும் நிதியை, வேறு பணிகளுக்கு, தி.மு.க., அரசு ஒதுக்குவது தவறானது. மத்திய அரசு ஒதுக்கிய நிதியை, அதற்கான உரிய திட்டத்தில் சேர்க்க வேண்டும். சமீபத்தில் அமைச்சர் நேரு, 44 லட்சம் ரூபாயை, திருப்பதி கோவிலுக்கு அளித்தது பேசு பொருளானது. அது குறித்து கேட்டபோது, 'அதனால் என்ன தவறு?' என, அவர் கேட்டார். கோவிலுக்கு அன்னதானம் அளிப்பது தவறல்ல. ஆனால், 'ஹிந்து என்றால் திருடன்; கோவில் என்றால் அசிங்கமான பொம்மைகள் இருப்பது' என, திருமாவளவன் மற்றும் தி.மு.க.,வினர் பேசியபோது, அமைதியாக இருந்தது தவறு. அதற்கு பரிகாரம் தேடிதான், அன்னதானம் செய்ய கோவிலுக்கு பணம் அளித்துள்ளதாகக் கருதுகிறோம். சிறப்பு வாக்காளர் திருத்த படிவத்தை பார்த்தால் தலை சுற்றுகிறது என, முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். பீஹார் தேர்தல் முடிவுகளை பார்த்த பின் தான், அவருக்கு தலை சுற்றியுள்ளது. வரக்கூடிய காலங்களில், அவருக்கு தலைசுற்றல் மேலும் அதிகமாகும். இது எங்கள் சாபம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை