உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சதுரகிரியில் பக்தர்கள் அனுமதி; மழையை பொறுத்தே முடிவு

சதுரகிரியில் பக்தர்கள் அனுமதி; மழையை பொறுத்தே முடிவு

வத்திராயிருப்பு : சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் தை மாத பிரதோஷம்,: பவுர்ணமி வழிபாட்டிற்கு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிப்பது, மழையை பொறுத்து முடிவு செய்யப்படும் என வனத்துறை தெரிவித்துள்ளது.இக் கோயிலில் ஜன. 23ல் தை மாத பிரதோஷம், ஜன 25ல் பவுர்ணமி வழிபாடு பூஜைகள் நடக்க உள்ளன. மழையின் காரணமாக 2 மாதங்களாக பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய முடியவில்லை. இப்போதும் பக்தர்களை அனுமதிப்பது குறித்து இதுவரை வனத்துறை அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.ஓடைகளில் நீர்வரத்து குறைந்துள்ள நிலையில் நேற்று முன்தினம் வரை வெயிலின் தாக்கம் காணப்பட்டது. ஆனால் நேற்று காலை முதல் சாரல் பெய்தது. இதனால் பக்தர்களை அனுமதிப்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.இது குறித்து சாப்டூர் வனச்சரகர் செல்வமணி கூறியதாவது: இதுகுறித்து நாளை (ஜன. 22) புலிகள் காப்பகத் துணை இயக்குனரிடம் ஆலோசித்து அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படும். மழையைப் பொறுத்தே பக்தர்கள் அனுமதிப்பது குறித்து முதல் நாள் தான் முடிவு செய்யப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை