| ADDED : டிச 10, 2025 06:32 AM
அமலாக்கத்துறை, தமிழக அரசு மீது ஊழல் குற்றச்சாட்டு கூறியுள்ளது. அதற்கு தமிழக அரசும், முதல்வரும் என்ன நடவடிக்கை எடுப்பர் என தெரியவில்லை. நட்பு ரீதியாக எங்களுக்கு மரியாதை கொடுக்கும் கட்சியுடன் கூட்டணி அமைப்போம். தி.மு.க., அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. இருந்த போதும், 2024ல் நடந்த லோக்சபா தேர்தலில், தி.மு.க., 39 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி வாய்ப்புக்கு யார் செய்த தவறு என, எல்லாருக்கும் தெரியும். தமிழகத்தில், எதிர் அணியினர் வலுவாக இல்லை என்ற நினைப்பில் தான், '200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம்' என முதல்வர் ஸ்டாலின் கூறி வருகிறார். அவர் சொல்லும் வெற்றி ரகசியத்தின் பின்னணி இதுதான். - தினகரன், பொதுச்செயலர், அ.ம.மு.க.,