உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் /  இலங்கை தொடர் கனமழையால் வெள்ளம்; 33 பேர் உயிரிழப்பு, 14 பேர் மாயம்

 இலங்கை தொடர் கனமழையால் வெள்ளம்; 33 பேர் உயிரிழப்பு, 14 பேர் மாயம்

கொழும்பு:: இலங்கையில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 33 பேர் உயிரிழந்தனர்; 14 பேர் மாயமாகி உள்ளனர். நம் அண்டை நாடான இலங்கையில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால், அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. இலங்கை முழுதும் ஆறுகளின் நீர்மட்டம் உயர்ந்து, குடியிருப்பு பகுதிகளை நோக்கி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. குறிப்பாக, தேயிலை தோட்ட பகுதிகளான நுவரெலியா, பதுல்லா அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. பதுல்லாவில் நிலச்சரிவு ஏற்பட்டு, 16 பேர் உயிருடன் புதைந்தனர். நுவரெலியாவில் நான்கு பேர் இறந்தனர். நாடு முழுதும் 33 பேர் மழைக்கு பலியாகி உள்ளனர். நிலச்சரிவில், 400 வீடுகள் சேதமடைந்துள்ளன. இதனால், 1,100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தற்காலிக முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளன. பாறைகள், மரங்கள் விழுந்ததால் தண்டவாளம் சேதமடைந்து, சில பகுதிகளில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை