| ADDED : ஜூன் 12, 2024 11:01 AM
'மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா' நிறுவனம், அதன் 'சி- 300 டி ஏ.எம்.ஜி., லைன்' என்ற சொகுசு செடான் காரை புதுப்பித்து மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது.பேபி எஸ்-கிளாஸ் என்று செல்லமாக அழைக்கப்படும் இந்த காரில் இம்முறை டீசல் இன்ஜினிற்கு பதிலாக எம் - 254 என்ற பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 70 சதவீதம் பென்ஸின் செடான் வாடிக்கையாளர்கள், பெட்ரோல் இன்ஜினை தேர்தெடுப்பதே இதற்கு முக்கிய காரணம். காரின் கூடுதல் பவருக்கு இன்டெக்ரேட்டட் ஸ்டார்டர் ஜெனரேட்டர் வழங்கப்பட்டுள்ளது.முதல் முறையாக முன்புற வென்டிலேட்டட் சீட்கள், ஸ்போர்டியான ஏ.எம்.ஜி., டிசைன், இரு வெளிப்புற நிறங்கள், ஆறு 100 வாட் பாஸ்ட் சார்ஜிங் யு.எஸ்.பி., - சி-போர்ட்கள், துள்ளியமான ஏ.ஆர்., நேவிகேஷன் அமைப்பு, கீலெஸ் ஸ்டார்ட், பர்மெஸ்டர் 3-டி சவுண்ட் சிஸ்டம், டிஜிட்டல் கீ வசதி, 360 டிகிரி கேமரா, பிளைன்ட் ஸ்பாட் அசிஸ்ட் உட்பட பல பாதுகாப்பு அம்சங்கள் இதில் உள்ளன. விலை: ரூ.69 லட்சம்
இன்ஜின் - 2 லிட்டர், எம் - 254, 4 சிலிண்டர், பெட்ரோல்ஹார்ஸ் பவர் - 258 எச்.பி.,டார்க் - 400 என்.எம்.,(0 - 100 கி.மீ., பிக்.அப்., - 6 நொடிகள்