உள்ளூர் செய்திகள்

/ கனவு இல்லம் / ஆலோசனை / மொட்டை மாடியில் ஒரு அழகிய பூங்கா! தோட்டக்கலைத்துறை உதவியுடன் அமைக்கலாம்

மொட்டை மாடியில் ஒரு அழகிய பூங்கா! தோட்டக்கலைத்துறை உதவியுடன் அமைக்கலாம்

குறைந்த பரப்பளவு மனை வாங்குவோர் அதில் தோட்டம் அமைக்க வேண்டும் என்றால், மொட்டை மாடி அல்லது பால்கனி பகுதிகளை நம்பி உள்ளனர்.இதில், எளிய முறையில் பயன்தரும் தாவரங்கள் வளர்க்க தோட்டக்கலைத்துறை மானிய விலையில், செடிகள், பொருட்கள், உரம் ஆகியவற்றை பொதுமக்களுக்கு வழங்குகிறது.உங்கள் வீட்டு மொட்டை மாடியில் என்னென்ன வகை செடிகளை வளர்ப்பது என்பதை தெளிவாக திட்டமிடுங்கள்.தொட்டிகள், பைகளை பயன்படுத்தி வளர்ப்பதற்கான செடிகள் தேர்வில், சில அடிப்படை வழிமுறைகளை கவனமாக பின்பற்றலாம். குறிப்பாக, செடிகள், கொடிகளை வகை வாரியாக வரிசைப்படுத்தி தேர்வு செய்வதில், முழுமையாக கவனம் செலுத்த வேண்டும்.சற்று உயரமாக வளரும் செடிகள், புதர் போன்று பரந்து வளரும் செடிகள் ஆகியவற்றை தேர்வு செய்யலாம். இத்துடன் கொடி வகையில், காய் தரும் வகை, பூக்கள் தரும் வகை என பிரித்து தேவையான தாவரங்களை, தேர்வு செய்யலாம்.இதில் மொட்டை மாடியில், ஒரு பகுதியை தோட்டமாக பிரித்து, அதில் மையப்பகுதியில் பெரிய செடிகளையும், ஓரங்களில் சிறிய செடிகளையும் வளர்க்கலாம். இரும்பு கம்பிகளை பயன்படுத்தி, கொடிகள் படரும் இடவசதியை ஏற்படுத்தலாம்.இதற்கான பந்தலில், சிறிய வகை மூலிகை தாவரங்கள், பூச்செடிகளை தொங்கும் தொட்டிகள் அமைத்து வளர்க்கலாம். மரம், செடி, கொடி என்று, காய்கள், பூக்கள் வளர்ந்து செழிக்கும் நிலையில், உங்கள் வீட்டு மொட்டை மாடி, ஒரு பூங்காவாக மாறி விடும்.அதிகம் வேர் விடாத, அதே நேரத்தில் குறைந்தளவு தண்ணீரில் வரும் செடிகளை தேர்வு செய்து வளர்க்கலாம். காய், கனிகள் தருவதற்காக மட்டுமல்லாது, வண்ண மலர்கள் தரும் செடி, கொடிகளையும், சேர்த்து வளர்க்க வேண்டும். சோலார் மின்சார உற்பத்தி வசதியை ஏற்படுத்தி, இரவு நேரங்களில் ஒளிரும் வகையில் விளக்குகளை அமைக்கலாம்.இவ்வாறு செய்தால், இரவு நேரங்களில் குறிப்பாக முழு நிலவு நாட்களில் உங்கள் வீட்டு மொட்டை மாடியில் பொழுதை கழிக்கும் சுகம், அலாதியானதாக இருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை