உள்ளூர் செய்திகள்

கனவு தவிர்... நிஜமாய் நில்!: பெண்கள் தானம் பெறுவதில்லை!

தீவிர சிறுநீரக நோய், ஆண்டுதோறும், 14 சதவீதம் பெண்களை பாதிக்கிறது. உலகம் முழுவதும், ஆறு லட்சம் பெண்கள் இந்தப் பிரச்னையால் இறக்கின்றனர். பெண்களை பொறுத்தவரை, மெதுவாகவே சிறுநீரக நோய் பரவுகிறது.பெண்களின் மனநிலை, சமூக வாழ்க்கை, பொருளாதார நிலை, கல்வி அறிவு, விழிப்புணர்வு இல்லாதது, நோய் எதிர்ப்பு சக்தி குறைவு போன்ற பல காரணங்களால், பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.பெண்கள், ஆண்களுக்கு சிறுநீரக தானம் செய்வது போல, ஆண்கள், பெண்களுக்கு சிறுநீரக தானம் செய்வது கிடையாது. கர்ப்பக் காலத்தில், சிறுநீரக நோய் ஏற்பட்டால், கர்ப்பம் கலைவதற்கு வாய்ப்பு அதிகமாவதுடன், மீண்டும் கருத்தரிக்கும் வாய்ப்பும் குறைவு. அதிக ரத்த அழுத்தம் இருந்தால், சிறுநீரக நோயின் காரணமாக, குறைப்பிரசவம் ஏற்படும்; கருத்தரிக்கும் திறனும் குறைவாக இருக்கும். இந்த நிலையில், 'டயாலிசிஸ்' செய்வது அவசியம். அதே சமயம், கர்ப்பம் சம்பந்தமான நோய்களால், சிறுநீரக நோய்க்கு அதிக வாய்ப்பு உண்டு. 'பிளாசென்டா' எனப்படும், தாய் - சேய் இணைப்புத் திசு, சிறுநீரகத்தை பாதிப்பதால், ரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரில் புரதம் அதிகம் வெளியேறி, ரத்தப்போக்கு ஏற்பட்டு, சிறுநீரகங்கள் பாதிப்பு அடைகின்றன.தினமும் தவறாமல் உடற்பயிற்சி செய்வது, ரத்த அழுத்தம் மற்றும் ரத்தத்தில், சர்க்கரை அளவை கட்டுக்குள் வைப்பது, தேவையான அளவு தண்ணீர் குடித்து, உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்வது.உயரத்திற்கு ஏற்ப, உடல் எடையுடன் இருப்பது, நார்ச்சத்து அதிகம் உள்ள தானியங்களை சாப்பிடுவது, காய்கறி, பழங்கள் அதிகம் எடுத்துக் கொள்வது அவசியம்.கலோரி குறைந்த உணவு வகைகளை சாப்பிடுவது, தினமும், 5 கிராமிற்கு மேல், உப்பு சாப்பிடாமல் இருப்பது, வெள்ளை சர்க்கரை, மைதா போன்றவற்றை தவிர்ப்பது உட்பட, சிறுநீரக செயல்பாடு குறித்து, தேவையான பரிசோதனை செய்து கொள்வது, சிறுநீரக நோய் வராமல் தடுக்கும்.டாக்டர் ஏ.ஆர்.ஜெகத் நாராயணன், சேலம்narayanan.drjagath02@gmail.com


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்