நாங்க இப்படிதானுங்க! பிடிக்காததை செய்யாமல் இருப்பது அழகு!
ஐதராபாத் பிரியாணி, ஐஸ்கிரீம், சாக்லெட் என, எனக்கு பிடித்த எல்லா உணவுகளையும், எந்த தயக்கமும் இல்லாமல் சாப்பிடுவேன். கொழுப்பை குறைக்க, அழகாவதற்காக என, செயற்கையாக அறுவை சிகிச்சையோ, வேறு வழிகளையோ எப்போதும் பின்பற்ற மாட்டேன் என்பதில் உறுதியாக இருக்கிறேன்.எவ்வளவு தான் கொழுப்பு அதிகம் உள்ள உணவை சாப்பிட்டாலும், ஜிம், ஒர்க் - அவுட், ஏரோபிக்ஸ் செய்வதை, தினப்படி வழக்கமாக வைத்துள்ளேன். அதனால் தான், இயல்பாக, மாதம் ஓரிரு கிலோ எடையை குறைக்க முடிந்தது. கடந்த சில ஆண்டுகளாக, ஒரே சீரான, 55 கிலோ எடையை பராமரிக்கவும் முடிகிறது.புத்தகம் வாசிப்பதும், சமைப்பதும் பிடிக்கும். நமக்குப் பிடித்த விஷயங்களை செய்யும் போது, மனம் ஒன்றிவிடும். இதுவும் தியானம் போன்றதே. அப்போது, மனம், 'ரிலாக்ஸ்' ஆகி விடும். மனதிற்கு பிடிக்காத, அயர்ச்சி ஏற்படுத்தும் எந்த விஷயத்தையும் செய்ய மாட்டேன்.- காஜல் அகர்வால், மாடல், நடிகை