உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / நிஜக்கதை / அக்னி புத்ரிகள்

அக்னி புத்ரிகள்

இன்றைய கால கட்டத்தில் 21 வயதில் கூட இளைஞர்கள் தடம் மாறிப்போகிறார்கள், ஆகவே அவர்களை 17 வயதிலேயே புடம் போட வேண்டும் என்பதற்காக கொண்டுவரப்பட்டதுதான் அக்னி பாதை திட்டம்.தங்களது பல்வேறு சாகசங்கள் மூலம் திட்டம் சிறப்பானதுதான் என்பதை சென்னையில் பயிற்சி பெற்ற வீராங்கனைகள் நிரூபித்தனர்.பிளஸ் டூ முடித்து,ஆர்வமும் தகுதியும் திறமையும் இருந்தால் போதும் ராணுவத்தில் சேரலாம் என்ற பிரதமர் மோடியின் அறிவிப்பைத் தொடர்ந்து தரைப்படை,விமானப்படை,கப்பல்படையில் 'அக்னி வீரர்கள்' சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.இவர்களுக்கு 22 வாரங்கள் பயிற்சி வழங்கப்பட்டு ராணுவத்தில் சேர்த்துக்கொள்ளப்படுவர்,நான்கு வருடங்கள் ராணுவத்தில் பணியாற்றுவர்,பணிபுரியும் காலத்தில் 40 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படும்,நான்கு வருடங்களுக்கு பிறகு 11 லட்சம் நிதியாக வழங்கப்படும், பணிக்காலத்தில் காயம் ஏற்பட்டால் 44 லட்சம் ரூபாய் வரை செலவிடப்படும்.நான்கு வருடங்களுக்கு பிறகு இவர்களில் 25 சதவீதம் பேர் ராணுவ வீரர் வீராங்கனையான தொடர்வார்கள் மீதம் உள்ளவர்கள் மத்திய அரசின் பல்வேறு பணிகளுக்கு சிபாரிசு செய்து அனுப்பப்படுவர்.,க்ஷபள்ளிப்படிப்பை முடித்த உடனேயே ராணுவ பயிற்சி தருவது என்பது நமது நாட்டு ராணுவத்தை இளமையுடனும்,வளமையுடனும் வைத்திருக்க உதவும் என்பது முப்படை தளபதிகளின் கருத்து.சென்னை தாம்பரத்தில் உள்ள இந்திய விமானப்படையில் 1983 அக்னிவீரர்கள் தங்களது பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்தனர், இவர்களில் 234 பேர் பெண்கள்.மிக இளவயது என்பதால் களைத்துப் போகாமல் வேகமாகவும், விவேகமாகவும், துல்லிதமாகவும் பயிற்சியை நிகழ்த்தினர்.தலைமுடியை ராணுவ வீரர்களுக்கான முறையில் ஒட்டவெட்டியிருந்ததால் யார் வீரர்கள்? யார் வீராங்கனைகள்? என்றே கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு சாகசங்கள் சரிசமமாக இருந்தனஎரியும் ஓடுகளை கையால்,தலையால் உடைத்தும்,,துப்பாக்கியை பம்பரம் போல சுழட்டியும்,சிலம்பம் வீசியும்,யோகா செய்தும் வீராங்கனைகள் அசத்தினர்.பிகார்,உ.பி.,ம.பி.,போன்ற பின் தங்கிய,மற்றும் மலை வாழ் கிராம மக்கள் நிகழ்ச்சியைக் காண நிறைய பேர் வந்திருந்தனர், அவர்கள் கண்களில் ஆனந்த கண்ணீர் காரணம் மைதானத்தின் மையத்தில் இருந்த பெரும்பாலன வீராங்கனைகள் அவர்களின் பிள்ளைகளாவர்..இவர்களுக்கு எல்லாம் கனவாக இருந்த ராணுவப்பணியை நனவாக்கியிருக்கும் அரசுக்கு நாங்களும் பிள்ளகைளும் செலுத்தும் நன்றி என்பது எந்த நிலையிலும் தாயகம் காப்பாதாகவே இருக்கும் என்றனர்,சிலிர்ப்பாக இருந்தது.-எல்.முருகராஜ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Lion Drsekar
அக் 17, 2024 14:20

மிக மிக அருமையான பதிவு, இதுபோன்ற பயிற்சி எடுத்தால் மட்டுமே அதன் அருமை புரியும், பயிற்சி காலமாகட்டும், பயிற்சி பெற்றபின்பும் மனதில் தனி அமைதி, ஆழ்மனதில் ஒரு தேசிய நீரோட்டம், கோமாவில் இருந்த நபர்கள் போல் , தற்போதைய செய்திகளான வழிப்பறி, கொலை, கொள்ளை, அது இது என்ற எந்த ஒரு இடையூறும் இல்லாமல், ஏதோ ஒரு இனம் புரியாத புதிய உலகத்தில் வாழ்வது போன்ற ஒரு மகிழ்ச்சி , இந்த செய்தியை இன்றைய இளைஞர்களுக்கு வெளிக்கொணர்ந்த தினமலருக்கு பாராட்டுக்கள், வந்தே மாதரம


chennai sivakumar
ஆக 21, 2024 13:02

சிங்கப்பூர் போல compulsory ஆக்க வேண்டும். 2 அல்லது 3 ஆண்டுகளுக்கு பின்னர் மேர் படிப்பு அல்லது இராணுவ வேலை. இப்போதுதான் கிட்டத்தட்ட முக்கால் நூற்றாண்டுகளுக்கு பின்னர் மோடி அரசு ஆரம்பித்து வைத்து உள்ளது. போக போக மாற்றங்கள் வரும் என்று நம்புகிறோம்.


Skn
ஆக 19, 2024 23:09

Agniveer a successful scheme. Only thing retention to be atleast 50%


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை