மேலும் செய்திகள்
சிங்கப்பூரில் சிறப்பாய்... இலக்கியத்தமிழ்
15-Dec-2025
ஐராவதி கார்வேயை அறிய இந்த புத்தகம் படிக்கலாம்
14-Dec-2025
பிரியங்காவின் பிரியமுள்ள வர்ணம்
07-Dec-2025 | 1
அற்புத ஆடை வடிவமைப்பாளர் சூர்யா
07-Dec-2025
'ஆசையாய் தேடியலைந்து வாங்கிய செடிகள் ஒரு கட்டத்தில் வீட்டை மொத்தமாய் அடைத்து நின்று சிரித்தன. செய்வதறியாமல் நின்ற போது தான் ஆன்லைனில் இவற்றை விற்க நினைத்தேன். இன்று செடிகள் தான் என்னை படிப்பைத் தாண்டிய தொழில் முனைவோராக மாற்றின,' என்கிறார் மதுரை துவரிமானைச் சேர்ந்த இன்ஜினியர் ஆன்சி நிஷாந்த்.ஆச்சர்யமும் சந்தோஷமும் தரும் செடிகள் என்னை தினந்தோறும் புதுப்பிக்கும் அதிசய புத்தகங்கள் என்று தொடங்கினார். ஈரோட்டில் பிறந்து கோவையில் பி.இ., முடித்தேன். எம்.டெக்., முடித்தபின் திருமணமானது. பெங்களூருவில் பேராசிரியராக வேலை பார்த்தேன். கல்லுாரியில் பாடம் கற்றுத் தந்தாலும் வீட்டில் செடிகளை வளர்த்து குழந்தை போல கொஞ்சுவது எனக்கு பிடிக்கும். குழந்தை பிறந்ததும் கணவரின் சொந்த ஊரான மதுரை வந்து விட்டோம். மதுரை துவரிமானில் வீடு கட்டி மரம், செடிகளை வளர்க்க ஆரம்பித்தேன். தேடியலைந்து வாங்கி வளர்த்த செடிகளின் எண்ணிக்கை 1500 ஐ தாண்டிவிட்டது. டேபிள் ரோஸ் செடியில் மட்டும் 100 நிறங்கள், மணிப்ளான்டில் 12 வகை, கோலியஸ் செடியில் 60 வகை, தொங்கும் வகையில் 25, இண்டோர் ப்ளான்டில் 50 வகைகள் வளர்க்கிறேன். எல்லா செடிகளும் வீட்டில் நிறைந்து நின்றதால் அடுத்து வாங்க முடியாமல் திகைத்தேன். ஒரே மாதிரி செடிகளை விற்பனை செய்ய நினைத்தேன். ஆன்லைனில் குறைந்த விலையில் விற்பனைக்கு கொடுத்த போது ஆர்டர்கள் அதிகமாக ஆரம்பித்தது. நானே வளர்த்து பதியமிட்டு விற்பதால் என்னால் மற்றவர்களை விட குறைந்த விலையில் செடிகளைத் தொட்டியுடன் தர முடிகிறது.'இண்டோர் ப்ளான்ட்கள்' தான் எனக்கு ஸ்பெஷல் விற்பனை. வீட்டில் டைனிங் டேபிள், 'டிவி' மேலே, கிச்சனில் 'இண்டோர் ப்ளான்ட்களை' வைக்கலாம். குறைந்தளவு தான் வளரும். இவற்றை வாங்கிய சிலர் தங்கள் வீட்டு கல்யாணத்திற்கு தாம்பூல பை போல தரமுடியுமா எனக் கேட்டனர். சிறிய செராமிக் அல்லது டெரகோட்டா பானையில் செடிகள் வைத்து பானையின் மேல் மணமக்கள் ஸ்டிக்கர் ஒட்டி குறைந்த விலைக்கு மொத்த ஆர்டருக்கு கொடுத்தேன். எல்லோர் வீட்டிலும் மரம் வளர்க்க முடியாது. சிறுபானைகளில் செடி வளர்ப்பது சாத்தியம் என்பதால் வரவேற்பு அதிகரித்துள்ளது.இண்டோரில் கோலியஸ் ஹேங்கிங் பிளான்ட், பிளோடென்ட்ரான், வண்ண இலைகளால் ஆன செடிகள், காற்றை சுத்தப்படுத்தும் ஸ்பைடர் பிளான்ட், ஜி.ஜி.பிளான்ட், ஸ்னேக் பிளான்ட் என நாசா பரிந்துரைத்த 10 வகை பிளான்ட்களை இண்டோரில் வளர்க்க பரிந்துரைக்கிறோம்.தொட்டிக்கேற்ப விலை மாறுபடுமே தவிர செடிகள் எல்லாமே ஒரே விலை தான். பூக்கும் தாவரங்கள் பெகுனியா, கினியா, இபோபியா எந்த தட்பவெப்பநிலையிலும் வளரும்.மண்புழு உரம், மீன் அமிலம், காய்கறி கழிவு, முட்டை ஓடுகளை உரமாக இடுகிறேன். எல்லாவற்றையும் நிழலில் காயவைத்து பூஞ்சை தாக்காத வகையில் உலர்த்திய பின் மிக்சியில் அரைத்து பொடியாக்கி பயன்படுத்தலாம். அரிசி, காய்கறி கழுவிய தண்ணீரை செடிகளுக்கு ஊற்றலாம்.வீட்டுக்குள் செடிகள் வளர்க்கும் போது தினமும் தண்ணீர் ஊற்ற வேண்டாம். ஈரப்பதம் இருந்தால் போதும். பூச்சி இருந்தால் மஞ்சள் துாள், மிளகாய்த்துாள், பச்சை மிளகாயை அரைத்து தண்ணீரில் கலந்து தெளிக்கலாம். வேப்பெண்ணெய் தெளிக்கலாம். குட்டி டெரகோட்டா அல்லது செராமிக் பானையில் செடிகள் கொடுக்கும் போது வாங்குவோரின் சந்தோஷம் இரட்டிப்பாகிறது. இந்த தாம்பூல செடிகள் என்னை தொழில் முனைவோராக்கி விட்டது என்கிறார் ஆன்சி நிஷாந்த்.இவரிடம் பேச: 86105 86155
15-Dec-2025
14-Dec-2025
07-Dec-2025 | 1
07-Dec-2025