எதிர் காலத்தை நினைத்து...
UPDATED : நவ 17, 2023 | ADDED : நவ 17, 2023
எதிர்காலத்தில் எப்படி வாழ போகிறோம் என சோம்பேறி இளைஞன் நினைத்து கொண்டே இருந்தான். அன்றிரவு அவனது கனவில் 'ஒரு பெரியவர் காட்டிற்கு செல் விடை கிடைக்கும்' என சொல்வது போல இருந்தது. மறுநாள் காட்டிற்கு சென்றான். ஒரு மரத்தடியில் கால்கள் இல்லாத நரி ஒன்று படுத்திருந்தது. அதற்கு சிங்கம் வாயில் இறைச்சியை கவ்விக் கொண்டு வந்து கொடுப்பதை பார்த்தான். அப்படியானால் நமக்கும் இருந்த இடத்தில் சாப்பாடு கிடைக்கும் என நினைத்து ஒரு மரத்தில் ஏறி அமர்ந்து இருந்தான். இரண்டு நாட்கள் ஆன பிறகும் ஏன் எனக்கு மட்டும் உணவு கிடைக்க வில்லை என நினைத்துக் கொண்டே இருந்தான். அப்போது நீ நரியல்ல... சிங்கம் என ஒரு குரல் கேட்டது. அன்றில் இருந்து உழைத்து சாப்பிட முடிவெடுத்த அவன் பிறருக்கு தினமும் உதவி செய்ய ஆரம்பித்தான்.