உள்ளூர் செய்திகள்

ஒளிமயமான எதிர்காலம் உள்ளத்தில் தெரிகிறது!

விருத்தாச்சலம் - திட்டக்குடி சாலையில் 22 கி.மீ., தூரத்திலுள்ள திருவட்டத்துறையில் அருள்புரியும் திரிபுரசுந்தரி சமேத தீர்த்தபுரீஸ்வரர் மீது நாவுக்கரசர் பாடிய தேவாரப் பாடல் இது. இதனைப் பக்தியுடன் படித்தால் எந்த பிரச்னையிலும் தெளிவான முடிவை எடுக்கலாம். ஒளிமயமான எதிர்காலம் பிறக்கும். கடவுளைக் கடலுள் எழும் நஞ்சுண்டஉடலுளானை ஒப்பார் இலாத எம்அடலுளானை அரத்துறை மேவியசுடருளானைக் கண்டீர் நாம் தொழுவதே.........................................................கரும்பு ஒப்பானைக் கரும்பினிற் கட்டியைவிரும்பு ஒப்பானை விண்ணோரும் அறிகிலாஅரும்பு ஒப்பானை அரத்துறை மேவியசுரும்பு ஒப்பானைக் கண்டீர் நாம் தொழுவதே..........................................................ஏறொப் பானை எல்லாவுயிர்க்கும் இறைவேறொப் பானை விண்ணோரும் அறிகிலாஆறொப் பானை அரத்துறை மேவியஊறொப் பானைக் கண்டீர் நாம் தொழுவதே............................................................பரப்பு ஒப்பானைப் பகலிருள் நன்னிலாஇரப்பு ஒப்பானை இளமதி சூடியஅரப்பு ஒப்பானை அரத்துறை மேவியசுரப்பு ஒப்பானைக் கண்டீர் நாம் தொழுவதே...........................................................நெய்யொப் பானை நெய்யிற்சுடர் போல் வதோர்மெய்யொப் பானை விண்ணோரும் அறிகிலார்ஐயொப் பானை அரத்துறை மேவியகையொப் பானைக் கண்டீர் நாம் தொழுவதே...........................................................நெதியொப் பானை நெதியிற் கிழவனைவிதியொப் பானை விண்ணோரும் அறிகிலார்அதியொப் பானை அரத்துறை மேவியகதியொப் பானைக் கண்டீர் நாம் தொழுவதே...........................................................புனலொப் பானைப் பொருந்தலம் தம்மையேமினலொப் பானை விண்ணோரும் அறிகிலார்அனலொப் பானை அரத்துறை மேவியகனலொப் பானைக் கண்டீர் நாம் தொழுவதே...........................................................பொன்னொப் பானைப் பொன்னறிசுடர் போல்வதோர்மின்னொப் பானை விண்ணோரும் அணிகிலார்அன்னொப் பானை அரத்துறை மேவியதன்னொப் பானைக் கண்டீர் நாம் தொழுவதே.......................................................காழி யானைக் கனவிடை யூருமெய்வாழி யானை வல்லோரும்என்று இன்னவர்ஆழி யான்பிர மற்கும் அரத்துறைஊழி யானைக் கண்டீர் நாம் தொழுவதே........................................................கலையொப் பானைக் கற்றார்க்கோர் அமுதினைமலையொப் பானை மணிமுடி யூன்றியஅலையொப் பானை அரத்துறை மேவியநிலையொப் பானைக் கண்டீர் நாம் தொழுவதே.