உள்ளூர் செய்திகள்

ஆனந்தம் விளையாடும் வீடு

சிவபெருமான் ஆனந்த தாண்டவம் ஆடும் தலம் சிதம்பரம். இங்கு அருள்பாலிக்கும் திருமூலநாதர், உமையம்மை மற்றும் நடராஜரை மனதில் நினைத்து இந்த பாடலைத் தினமும் மாலையில் படித்தால், வீட்டில் ஆனந்தம் நிலைத்திருக்கும். திருநாவுக்கரசர் பாடியது இது. .........அரியானை அந்தணர் தம் சிந்தையானைஅருமறையின் அகத்தானை அணுவை யார்க்கும்தெரியாத தத்துவனைத் தேனைப் பாலைத்திகழொளியைத் தேவர்கள் தங்கோனை மற்றைக்கரியானை நான்முகனைக் கனலைக் காற்றைக்கனைக்கடலைக் குலவரையைக் கலந்து நின்றபெரியானைப் பெரும்பற்றப் புலியூரானைப்பேசாத நாளெல்லாம் பிறவா நாளே..............................................................கற்றானைக் கங்கைவார் சடையான் தன்னைக்காவிரிசூழ் வலஞ்சுழியுங் கருதினானைஅற்றார்க்கும் அலந்தார்க்கும் அருள்செய்வானைஆரூரும் புகுவானை அறிந்தோ மன்றேமற்றாருந் தன்னொப்பார் இல்லாதானைவானவர்கள் எப்பொழுதும் வணங்கி ஏத்தப்பெற்றான் பெரும்பற்றப் புலியூரானைப்பேசாத நாளெல்லாம் பிறவா நாளே............................................................கருமானின் உரியதளே உடையா வீக்கிக்கனைகழல்கள் கலந்தொலிப்ப அனல்கை ஏந்திவருமானத் திரள்தோள்கள் மட்டித் தாடவளர்மதியஞ் சடைக்கணிந்து மானேர் நோக்கிஅருமான வாண்முகத்தாள் அமர்ந்து காணஅமரர்கணம் முடிவணங்க ஆடுகின்றபெருமானைப் பெரும்பற்றப் புலியூரானைப்பேசாத நாளெல்லாம் பிறவா நாளே...........................................................அருந்தவர்களே தொழுதேத்தும் அப்பன் தன்னைஅமரர்கள் தம் பெருமானை அரனை மூவாமருந்தமரர்க்கு அருள்புரிந்த மைந்தன் தன்னைமறிகடலும் குலவரையும் மண்ணும் விண்ணும்திருந்தொளிய தாரகையும் திசைகள் எட்டும்திரிசுடர்கள் ஓரிரண்டும் பிறவு மாயபெருந்தகையைப் பெரும்பற்றப் புலியூரானைப்பேசாத நாளெல்லாம் பிறவா நாளே...........................................................அருந்துணையை அடியார்தம் அல்லல் தீர்க்கும்அருமருந்தை அகன்ஞாலத் தகத்துள் தோன்றிவருந்துணையும் சுற்றமும் பற்றும் விட்டுவான்புலன்கள் அகத்தடக்கி மடவாரோடும்பொருந்தணைமேல் வரும்பயனைப் போக மாற்றிப்பொதுநீக்கித் தனைநினைய வல்லோர்க் கென்றும்பெருந்துணையைப் பெரும்பற்றப் புலியூரானைப்பேசாத நாளெல்லாம் பிறவா நாளே...........................................................கரும்பமரும் மொழிமடவாள் பங்கன் தன்னைக்கனவயிரக் குன்றனைய காட்சி யானைஅரும்பமரும் பூங்கொன்றைத் தாரான் தன்னைஅருமறையோடு ஆறங்கம் ஆயினானைச்சுரும்பமருங் கடிபொழில்கள் சூழ்தென் ஆரூர்ச்சுடர்க்கொழுந்தைத் துளக்கில்லா விளக்கை மிக்க பெரும்பொருளைப் பெரும்பற்றப் புலியூரானைப்பேசாத நாளெல்லாம் பிறவா நாளே...............................................................வரும்பயனை எழுநரம்பின் ஓசையானைவரைசிலையா வானவர்கள் முயன்ற வாளி அரும்பயம்செய் அவுணர்புரம் எரியக் கோத்தஅம்மானை அலைகடல்நஞ்சு அயின்றான்தன்னைச் சுரும்பமருங் குழல்மடவார் கடைக்கண் நோக்கில்துளங்காத சிந்தையராய்த் துறந்தோ ருள்ளப்பெரும்பயனைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்பேசாத நாளெல்லாம் பிறவா நாளே................................................................காரானை யீருரிவைப் போர்வை யானைக்காமருபூங் கச்சியே கம்பன் தன்னைஆரேனும் அடியவர்கட் குணியான் தன்னைஅமரர்களுக்கு அறிவரிய அளவிலானைப்பாரோரும் விண்ணோரும் பணிய நட்டம்பயில்கின்ற பரஞ்சுடரைப் பரனை எண்ணில்பேரானைப் பெரும்பற்றப் புலியூரானைப்பேசாத நாளெல்லாம் பிறவா நாளே................................முற்றாத பால்மதியம் சூடினானைமூவுலகும் தானாய முதல்வன் தன்னைச் செற்றார்கள் புரமூன்றும் செற்றான் தன்னைத்திகழொளியை மரகதத்தைத் தேனைப் பாலைக் குற்றாலம் அமர்ந்துறையும் குழகன் தன்னைக்கூத்தாட வல்லானைக் கோளை ஞானம்பெற்றானைப் பெரும்பற்றப் புலியூரானைப்பேசாத நாளெல்லாம் பிறவா நாளே...................................................................காரொளிய திருமேனிச் செங்கண் மாலும்கடிக்கமலத் திருந்தவனும் காணா வண்ணம்சீரொளிய தழற்பிழம்பாய் நின்ற தொல்லைத் திகழொளியைச் சிந்தைதனை மயக்கம் தீர்க்கும்ஏரொளியை இருநிலனும் விசும்பும் விண்ணும்ஏழுலகும் கடந்தண்டத் தப்பால் நின்றபேரொளியைப் பெரும்பற்றப் புலியூரானைப்பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.