உள்ளூர் செய்திகள்

ஏழுமலையில் ஐந்து தரிசனம்

திருப்பதியில் பெருமாள் ஐந்து நிலைகளில் காட்சியளிக்கிறார். மூலவர், மலையப்பர், உக்ர சீனிவாசர், போக சீனிவாசர், கொலுவு சீனிவாசர் என்னும் இவர்களை 'பஞ்ச பேரர்கள்' என்பர்.* மூலவர் கருவறையில் நின்ற கோலத்தில் சங்கு, சக்கரம் ஏந்திய நிலையில் இருக்கிறார். இவரே கோயிலின் பிரதான மூர்த்தி.* ஸ்ரீதேவி, பூதேவியுடன் எழுந்தருள்பவர் உற்ஸவர் மலையப்பர். தினமும் இவர் கல்யாண கோலத்தில் காட்சியளிப்பார். 'மலைக்கினிய பெருமாள்' என்றும் இவருக்கு பெயருண்டு. * உக்ரசீனிவாசர் ஆண்டுக்கொரு முறை கார்த்திகை துவாதசியன்று அதிகாலையில் பவனி வருவார். இவரை மற்ற நாட்களில் பக்தர்கள் தரிசிக்க முடியாது. * போகசீனிவாசர் வெள்ளியால் செய்யப்பட்டவர். இவர் அன்றாட அபிஷேகத்திற்காக எழுந்தருள்வார். * கோயிலில் நடக்கும் அன்றாட வரவு, செலவு கணக்கை அதிகாரிகள் சமர்ப்பிக்கும் போது அதை ஏற்பவர் கொலுவுசீனிவாசர்.