நாகதோஷம் நீங்கி திருமணம் நடக்கணுமா!
UPDATED : ஜூன் 08, 2016 | ADDED : ஜூன் 08, 2016
திருநாவுக்கரசர் பாடிய இந்தப்பாடல் காளஹஸ்தி காளஹஸ்தீஸ்வரர், ஞானப்பூங்கோதை மீது பாடப்பட்டது. ஜாதகத்தில் நாகதோஷம் எனப்படும் ராகு, கேது தோஷம் நீங்கி திருமணயோகம் கைகூட இதைப் பாடலாம். இங்குள்ள அம்பிகை கல்வி தேவதையாக விளங்குவதால் மாணவர்களும் கல்வி விருத்திக்காக படிக்கலாம். அம்பாளின் பெயர் ஒன்பதாம் பாடலில் உள்ளது. விற்றூண் ஒன்று இல்லாத நல்கூர்ந்தான் காண்வியன் கச்சிக் கம்பன்காண் பிச்சை அல்லால்மற்றூண் ஒன்று இல்லாத மாசதுரன் காண்மயானத்து மைந்தன் காண் மாசொன்று இல்லாப்பொற்றூண் காண் மாமணிநற் குன்றொப்பான்காண்பொய்யாது பொழில் ஏழும் தாங்கி நின்றகற்றூண் காண் காளத்தி காணப் பட்டகணநாதன் காண் அவனென் கண்ணுளானே.இடிப்பான் காண் என்வினையை ஏகம்பன்காண்எலும்பா பரணன் காண் எல்லாம் முன்னேமுடிப்பான் காண் மூவுலகும் ஆயினான் காண்முறைமையால் ஐம்புரியும் வழுவா வண்ணம்படித்தான் தலையறுத்த பாசுபதன்காண்பராய்த்துறையான் பழனம் பைஞ்ஞீலியான்காண்கடித்தார் கமழ்கொன்றைக் கண்ணியான்காண்காளத்தில் யானவனன் கண்ணுளானே.நாரணன்காண் நான்முகன்காண் நால்வே தன்காண்ஞானப் பெருங்கடற்கோர் நாவாய் அன்னபூரணன் காண் புண்ணியன் காண் புராணன் தான்காண்புரிசடைமேற் புனலேற்ற புனிதன் தான் காண்சாரணன்காண் சந்திரன்காண் கதிரோன் தான்காண்தன்மைக்கண் தானே காண் தக்கோர்க்கெல்லாம்காரணன்காண் காளத்தி காணப்பட்டகணநாதன்காண் அவனென் கண்ணுளானே.செற்றான்காண் என்வினையைத் தீயாடிகாண்திருவொற்றியூரான் காண் சிந்த செய்வார்க்குற்றான்காண் ஏகம்பம் மேவினான்காண்உமையாள் நற்கொழுநன்காண் இமையோர் ஏத்தும்சொற்றான் காண் சோற்றுத் துறையுளான் காண்சுறாவேந்தன் ஏவலத்தை நீறா நோக்கக்கற்றான் காண் காளத்தி காணப்பட்டகணநாதன் காண் அவனேன் கண்ணுளானே.மனத்தகத்தான் தலைமேலான் வாக்கினுள்ளான்வாயாரத் தன்னடியே பாடும் தொண்டர்இனத்தகத்தான் இமையவர்தம் சிரத்தின் மேலான்ஏழண்டத் தப்பாலான் இப்பாற் செம்பொன்புனத்தகத்தால் நறுங்கொன்றைப் போதினுள்ளான்பொருப்பிடையான் நெருப்பிடையான் காற்றினுள்ளான்கனத்தகத்தான் கயிலாயத் துச்சியுள்ளான்காளத்தியானவனென் கண்ணுளானே.எல்லாம் முன் தோன்றாமே தோன்றினான்காண்ஏகம்பம்மேயான்காண் இமையோர் ஏத்தப்பொல்லாப் புலனைந்தும் போக்கினான்காண்புரிசடைமேற் பாய்கங்கை பூரித்தான்காண்நல்லவிடை மேல்கொண்டு நாகம் பூண்டுநளிச்சரமொன் றேத்தியோர் நாணாயற்றகல்லாடை மேற்கொண்ட காபாலிகாண்காளத்தி யானவனென் கண்ணுளானே.கரியுருவு கண்டத்தெங் கண்ணுளான்கண்கண்டன்காண் வண்டுண்ட கொன்றை யான்காண்எரிபவள வண்ணன் காண் ஏகம்பன்காண்எண்டிசையும் தானாய குணத்தினான்காண்திரிபுரங்கள் தீயிட்ட தீயாடி காண்தீவினைகள் தீர்த்திடுமென் சிந்தையான்காண்கரியுரிவை போர்த்துகந்த சிந்தையான்காண்கரியுரிவை போர்த்துகந்த காபாலிகாண்காளத்தி யானவனென் கண்ணுளானே.இல்லாடிச் சில்பலி சென்றேற்கின்றான் காண்இமையவர்கள் தொழுதிறைஞ்ச இருக்கின்றான் காண்வில்லாடி வேடனா யோடினான் காண்வெண்ணூலுஞ் சேர்ந்த அகலத்தான்காண்மல்லாடு திரள்தோள்மேல் மழுவாளன்காண்மலைமகள்தன் மணாளன்காண் மகிழ்ந்து முன்னாள்கல்லாலின் கீழிருந்த காபாலி காண்காளத்தி யானவனென் கண்ணுளானே.தேனப்பூ வண்டுண்ட கொன்றையான்காண்திரு ஏகம்பத்தான் காண் தேனார்ந்து உக்கஞானப்பூங் கோதையாள் பாகத்தான் காண்நம்பன்காண் ஞானத்தொளியானான் காண்வானப்பேர் ஊருமறிய வோடிமட்டித்து நின்றான் காண் வண்டார் சோலைக்கானப்பேரூரான் காண் கறைக்கண் டன்காண்காளத்தி யானவனென் கண்ணுளானே.இறையவன் காண் ஏழுலகும் ஆயினான்காண்ஏழ்கடலும் சூழ்மலையும் ஆயினான்காண்குறையுடையார் குற்றேவல் கொள்வான் தான்காண்குடமூக்கிற் கீழ்க்கோட்டம் மேவினான்காண்மறையுடைய வானோர் பெருமான் தான்காண்மறைக்காட்டு உறையும் மணிகண் டன் காண்கறையுடைய கண்டத்தெம் கபாலிகாண்காளத்தி யானவனென் கண்ணுளானே.உண்ணா வருநஞ்ச முண்டான் தான் காண்ஊழித்தீ யன்னான்காண் உகப்பார் காணப்பண்ணாரப் பல்லியம் பாடினான் காண்பயின்ற நால் வேதத்தின் பண்பினான் காண்அண்ணாமலையான் காண் அடியார் ஈட்டம்அடியிணைகள் தொழுதேத்த அருளுவான் காண்கண்ணாரக் காண்பார்க்கோர் காட்சியான் காண்காளத்தி யானவனென் கண்ணுளானே.