உள்ளூர் செய்திகள்

கணவர், பிள்ளை வழி தவறி செல்கிறார்களா!

கடலூர் மாவட்டம் திருக்கழிப்பாலை பால்வண்ணநாதர் மீது திருநாவுக்கரசர் பாடிய பாடல்கள் இவை. கணவர், பிள்ளைகள் தீய நண்பர்களால் வழி தவறி நடந்தால், அவர்கள் திருந்த இதைப் படிக்கலாம். ஊனுடுத்தி ஒன்பது வாசல் வைத்துஒள்ளெலும்பு தூணாவு ரோமம் மேய்ந்துதாம் எடுத்த கூரை தவிரப் போவார்தயக்கம் பலபடைத்தார் தாமரையினார்கானெடுத்து மாமயில்களாலும் சோலைக்கழிப்பாலை மேய கபாலப்பனார்வானிடத்தை ஊடறுத்து வல்லைச் செல்லும்வழிவைத்தார்க் கவ்வழியே போதும் நாமே.முறையார்ந்த மும்மதிலும் பொடியாச் செற்றுமுன்னுமாய்ப் பின்னுமாய் முக்கண் எந்தைபிறையார்ந்த சடைமுடிமேல் பாம்பு கங்கைபிணக்கம் தீர்த்துடன் வைத்தார் பெரிய நஞ்சுக்கறையார்ந்த மிடற்றடங்கக் கண்ட எந்தைகழிப்பாலை மேய கபாலப்பனார்மறையார்ந்த வாய்மொழியான் மாய யாக்கைவழிவைத்தார்க் கவ்வழியே போதும் நாமே.நெறிவுண்டாக் கருதாதே நிமலன் தன்னைநினைமின்கள் நித்தலும் நேரிழையாளாயஒளிவண்டார் கருங்குழலி உமையாள் தன்னைஒரு பாகத்தமர்ந்து அடியாருள் ஏத்தக்களிவண்டார் கரும்பொழில்சூழ் கண்டல் வேலிக்கழிப்பாலை மேய கபாலப்பனார்வளியுண்டார் மாயக் குரம்பை நீங்கவழிவைத்தார்க் கவ்வழியே போதும் நாமே.பொடிநாறு மேனியர் பூதிப் பையர்புலித்தோலர் பொங்கரவர் பூண நூலர்அடிநூறு கமலத்தர் ஆரூர் ஆதிஆனஞ்சு மாடும் ஆதிரையினார் தாம்கடிநூறு பூஞ்சோலை கமழ்ந்து நாறும்கழிப்பாலை மேய கபாலப்பனார்மடிநாறு மேனியிம் மாயம் நீங்கவழிவைத்தார்க் கவ்வழியே போதும் நாமே.விண்ணனாய் விண்ணவர்கள் விரும்பி வந்துவேதத்தாய் கீதத்தாய் விரவி எங்கும்எண்ணானாய் எழுத்தானாய் கடல் ஏழானாய்இறையானாய் எம்மிறையே என்று நிற்கும்கண்ணானாய் காரானாய் பாரும் ஆனாய்கழிப்பாலை உள்ளுறையும் கபாலப்பனார்மண்ணாய மாயக் குரம்பை நீங்கவழிவைத்தார்க் கவ்வழியே போதும் நாமே.விண்ணப்ப விச்சாதரர்கள் ஏத்தவிரிகதிரான் எரிசுடரான் விண்ணுமாகிப்பண்ணப்பன் பத்தர் மனத்துளேயும்பசுபதி பாசுபதம் தேச மூர்த்திகண்ணப்பன் கண்ணப்பக் கண்டுகந்தார்கழிப்பாலை மேய கபாலப்பனார்வண்ணப் பிணிமாய யாக்கை நீங்கவழிவைத்தார்க் கவ்வழியே போதும் நாமே.பிணம்புல்கு பீறற் குரம்பை மெய்யாப்பேதப் படுகின்ற பேதை மீர்காள்நிணம் புல்கு சூலத்தர் நீல கண்டர்எண்டோளர் எண்ணிறைந்த குணத்தினாலேகணம்புல்லன் கருத்துகந்தார் காஞ்சி உள்ளார்கழிப்பாலை மேய கபாலப்பனார்மணம்புல்கு மாயக் குரம்பை நீங்கவழிவைத்தார்க் கவ்வழியே போதும் நாமே.இயல்பாய ஈசனை எந்தை தந்தைஎன்சிந்தை மேவி உறைகின் றானைமுயல்வானை மூர்த்தியைத் தீர்த்த மானதியம்பகன் திரிசூலத் தன்ன கையன்கயல்பாயும் கண்டல்சூழ் உண்ட வேலிக்கழிப்பாலை மேய கபாலப்பனார்மயலாய மாயக் குரம்பை நீங்கவழிவைத்தார்க் கவ்வழியே போதும் நாமே.செற்றதோர் மனமொழிந்து சிந்தை செய்துசிவமூர்த்தி என்றெழுவார் சிந்தை உள்ளால்உற்றதோர் நோய்களைந்து இவ்வுலகம் எல்லாம்காட்டுவான் உத்தமன் தான் ஓதாது எல்லாம்கற்றதோர் நூலினான் கயிறு செற்றான்கழிப்பாலை மேய கபாலப்பனார்மற்றிதோர் மாயக் குரம்பை நீங்கவழிவைத்தார்க் கவ்வழியே போதும் நாமே.பொருதலங்கல் நீள்முடியான் போர் அரக்கன்புட்பகந்தான் பொருப்பின் மீதோடா தாகஇருநிலங்கள் நடுக்கெய்த எடுத்திடுதலும்ஏந்திழையாள் தான் வெருவ இறைவன் நோக்கிக்கரதலங்கள் கதிர்முடியா றஞ்சினோடுகால்விரலால் ஊன்று கழிப்பாலையார்வருதலங்க மாயக் குரம்பை நீங்கவழிவைத்தார்க் கவ்வழியே போதும் நாமே.