கேளுங்க சொல்கிறோம்!
* கும்பாபிஷேகம் முடிந்த 48 நாட்களுக்குள் கோவிலுக்குச் செல்வதன் நோக்கம் என்ன?ஜானகி ரங்கநாதன், மயிலாப்பூர்.கும்பாபிஷேக தினம் முதல் 45 நாட்கள் மண்டலாபிஷேம் நடத்தப்படவேண்டும் என ஆகமங்கள் கூறுகின்றன. இந்நாட்களில் அக்கோவிலில் உள்ள தெய்வங்களின் சக்தியை அதிகரிப்பதற்காக சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். அவற்றில் கலந்து கொண்டாலும் தரிசித்தாலும் நல்ல பலன்கள் ஏற்படும்.* மந்திரங்களுக்கு முன்னால் ஓம் என்று சேர்த்துச் சொல்வது ஏன்?ஆர்.அபிதா, கூடுவாஞ்சேரி.எல்லா மந்திரங்களுக்கும் வேதங்களுக்கும் முன்னே தோன்றியது பிரணவம் எனப்படும் 'ஓம்'கார மந்திரமாகும். இது பரப்பிரம்ம (தெய்வ) வடிவம். இதிலிருந்து தான் ஒலிகளும், வார்த்தைகளும், எழுத்துக்களும், சொற்களும் தோன்றின. எல்லா மொழிகள் தோன்ற மூலகாரணமானதும் ஓம் தான். எனவே மந்திரங்களின் முன் இதைச் சேர்த்துச் சொன்னால் தான் அம்மந்திரங்கள் முழுமை பெறும்.** குழந்தை ஆரோக்கியமாக பிறக்க வழிபடவேண்டிய தெய்வம் எது?எஸ்.அபர்ணா, கோவை.ஆரோக்கியம் மட்டுமல்ல... அறிவாளியாகவும் பிறக்க நாகப்பட்டினம் மாவட்டம் திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரரை வழிபட்டால் எல்லா சிறப்புகளுடன் நல்ல குழந்தை பிறக்கும். இத்தலம் பற்றி திருஞானசம்பந்தர் அருளியுள்ள தேவாரத்தில் இந்தக் குறிப்பு உள்ளது. அந்த தேவாரப் பாடலை படித்தாலும் அறிவுள்ள குழந்தை பிறக்கும். நவக்கிரக ஸ்தலங்களில் இது புதனுக்கு உரியதாகும்.கல்லில் செய்த வலஞ்சுழி விநாயகரை வீட்டில் வைத்து வழிபடலாமா?எம்.சவுந்தரவல்லி. வில்லியனூர்.செய்யலாம். கருங்கல், செம்பு, பஞ்சலோகம், வெள்ளி, தங்கம் போன்றவற்றில் எதில் செய்திருந்தாலும் அந்தச் சிலைகள் பூஜைக்கு ஏற்புடையதே. மாக்கல், பிளாஸ்டிக் சிலைகளைத் தவிர்க்க வேண்டும்.குழந்தைக்கு காது குத்துவதற்கு வயது வரம்பு இருக்கிறதா?எம்.வீ.மதுரைச்சாமி,மதுரை.இரண்டுவிதமாக வழக்கில் உள்ளது. ஒருவயது பூர்த்தியாகும் அன்று காது குத்துதல் பொதுவாக நடைமுறையில் உள்ளது. குழந்தை பிறந்து ஆறு மாதங்களுக்கு பிறகு பெண் குழந்தைகளுக்கு ஒற்றைப்படை மாதத்திலும் ஆண் குழந்தைகளுக்கு இரட்டைப்படை மாதத்திலும் காது குத்துவது உண்டு.