கேளுங்க சொல்கிறோம்!
* வீட்டில் காகம் கரைந்து கொண்டிருப்பது நல்லதா, கெட்டதா?வேம்புநாதன், சென்னைகாகம், குயில் போன்ற உயிர்கள் நம்மைச் சுற்றி வாழ்ந்து கொண்டிருக்கின்றன. அவை எழுப்பும் ஒலியை ரசித்து மகிழுங்கள். நல்லது, கெட்டது என்ற ஆராய்ச்சி வேண்டாம்.* அபிஷேகம் செய்த பாலை தயிராக்கி பயன்படுத்தலாமா?எஸ்.கனகாங்கி, விருத்தாசலம்.இப்படி செய்வது குறித்து சாஸ்திரத்தில் குறிப்பு இல்லை. அபிஷேகம் செய்த பாலை பக்தர்களுக்கு விநியோகிப்பதே முறையானது.காலையில் எழுந்தவுடன் உள்ளங்கையைப் பார்ப்பது ஏன்?ஆர். தேவகி, கோடம்பாக்கம்விரல்களின் நுனியில் மகாலட்சுமியும், உள்ளங்கையில் சரஸ்வதியும், கீழ் மணிக்கட்டுப்பகுதியில் பார்வதியும் இருப்பதாக ஐதீகம். கண் விழித்தவுடன் தேவியரை தரிசிக்கும் விதத்தில் இப்படி செய்வதால் நாள் முழுவதும் நல்லது நடக்கும்.'கராக்ரே வஸதே லக்ஷ்மீ: கரமத்யே சரஸ்வதீ| கரமூலேது கௌரீஸ்யாத் ப்ரபாதே கரதர்சனம்' என்னும் ஸ்லோகம் இதை விளக்குகிறது. வெண்கலம், பித்தளை சிலைகளை பூஜையறையில் வைத்து பூஜிக்கலாமா?விஷ்ணுகுமாரி மதுரை.வழக்கில் உள்ள ஒன்றுதான்... தாராளமாகச் செய்யலாம். நவக்கிரகங்களை மூலவரை தரிசிக்கும் முன்பே வணங்க வேண்டுமா?டி.செல்வகணேஷ், புதுச்சேரிமூலவர் மற்றும் பிரதான தெய்வங்களை தரிசித்த பின்பு வணங்க வேண்டும்.** சுமங்கலியாக வாழ என்ன விரதம் இருக்க வேண்டும்?எம்.பிரேமலதா, பெரியகுளம்.நம் கலாசாரத்தில் உள்ள வாசலில் கோலமிடுதல், விளக்கேற்றுதல் போன்ற நல்ல விஷயங்களைச் செய்தாலே போதும். அந்த நேரத்தில் தூங்குதல்,'டிவி' பார்த்தல் போன்றவை செய்யாதிருத்தல், செவ்வாய், வெள்ளி, பவுர்ணமி நாட்களில் விரதமிருந்து கோவிலுக்கு செல்லுதல், குடும்ப பாங்குடன் புடவை, ரவிக்கை அணிதல், குங்குமம், பூச்சூடுதல், கணவனுக்காக மனைவி, மனைவிக்காக கணவன் கடவுளிடம் வேண்டிக் கொள்ளுதல் இப்படி செய்தாலே போதும். வெள்ளிக்கிழமையில் அம்மன் கோவிலில் வழிபடுவது நல்லது.சிவனுக்கு எத்தனை பிரதோஷத்திற்கு விரதம் இருக்க வேண்டும்?பி.லலிதா, திருப்பூர்திருமணம், குழந்தைப்பேறு, வியாபார வளர்ச்சி என ஏதாவது பலன் கருதி விரதமிருப்பவர்கள், அந்த விருப்பம் நிறைவேறும் வரை விரதமிருங்கள். முடிந்தால் ஆயுள் முழுவதும் இருக்கலாம்.பிள்ளையாருக்கு 108 தேங்காய் உடைப்பது ஏன்?ஆர். கலாவதி, கடலூர்புதிய முயற்சியில் ஈடுபடும் போது பிள்ளையாருக்கு தேங்காய் உடைத்து வழிபட்டால் தடையின்றி செயல் நிறைவேறும். எப்படியும் குறிக்கோளை அடைய வேண்டும் என்ற வைராக்கியமுடன் இதை பலரும் செய்கின்றனர். இதனால் விநாயகரின் அருளும், மன தைரியமும் ஒன்றிணைந்து வெற்றிக்கான வாய்ப்பு உண்டாகிறது. ௧௦௮ தான் என்று இல்லை. மனதார ஒன்று உடைத்தால் போதும்.