உள்ளூர் செய்திகள்

கேளுங்க சொல்கிறோம்

* பொறாமை உண்டாவது ஏன்? விடுபடுவது எப்படி?த.மணிகண்டன், தேனிஎதற்காகவும் மற்றவருடன் உங்களை ஒப்பிடாதீர்கள். ஒப்பிட்டால் பொறாமை தான் மிஞ்சும். கடவுளைச் சரணடைந்து, உங்களிடம் இருப்பதைக் கொண்டு திருப்தியாக வாழுங்கள். * கண்கள் துடிக்கிறதே... நல்லதா கெட்டதா?கி.அப்புக்குட்டி, பாலக்காடுஆண்களுக்கு வலது புறமும், பெண்களுக்கு இடதுபுறமும் உடலுறுப்புகள் துடிப்பது நல்ல சகுனம். உதாரணமாக இலங்கையை நோக்கி அனுமன் புறப்பட்ட போது அசோகவனத்தில் இருந்த சீதைக்கு இடது கண் துடித்தது. * அர்ச்சகர், பூஜாரி, புரோகிதர் - விளக்கம் தேவை.எம்.கமலா, கோவைஅர்ச்சகர் - சிவன், விஷ்ணு போன்ற தெய்வங்களுக்கு பூஜை செய்பவர் பூஜாரி - கருப்பணசாமி, முனியசாமி போன்ற தெய்வங்களுக்கு பூஜை செய்பவர் புரோகிதர் - திருமணம், கிரகப்பிரவேசம் போன்ற வற்றை நடத்தி வைப்பவர் * சாஸ்திரப்படி திருமணம் நடத்தினாலும் சிலர் பிரிந்து விடுகிறார்களே... பா.ரக் ஷனி, கடலுார். சாஸ்திரப்படி தான் திருமணச் சடங்குகள் நடக்கின்றன.ஆனால் விதியின் பிடியில் இருந்து யாரும் தப்ப முடியாது. முற்பிறவியில் ஒருவர் செய்த புண்ணிய, பாவங்களின் விளைவு தான் இப்போதைய வாழ்க்கை. * கயாவில் சிராத்தம் கொடுத்தால் அதன்பின் வருடத்திதி கொடுக்கத் தேவையில்லையா?ஜி. சேதுராமலிங்கம், சிவகாசிகயாவில் சிராத்தம் கொடுத்தாலும், மறைந்த பெற்றோருக்கு வருடத்திதி கொடுப்பது அவசியம். *தர்ப்பணத்திற்கு பயன் படுத்திய எள், தர்ப்பையை என்ன செய்யலாம்?கே.பிரதீபா, ஊட்டிஆறு, குளம், கிணறு போன்ற நீர்நிலைகளில் கால் மிதி படாமல் விட்டு விடலாம். * வியாபார வளர்ச்சிக்கு என்ன செய்யலாம்? கே.சவுந்தர், பெங்களூரு. நேர்மை தவறாதீர்கள். உண்மையுடன் உழைப்பில் ஈடுபடுங்கள். வெள்ளி அன்று சுக்ர ஹோரையில் (காலை 6:00 - 7:00 மணிக்குள் )சூரியன், மகாலட்சுமியை வழிபடுங்கள். * தினமும் புறாவுக்கு உணவளிக்கிறேன். அது சத்தமிட்டால் வீட்டிற்கு ஆகாது என்கிறார்களே...என்.செல்வமணி, சென்னை. உண்மை தான். புறாவை வீட்டில் வளர்ப்பதில்லை. அதற்கு உணவிடுவது தர்மம். உங்களுக்கு புண்ணியம் சேரும். * பைரவர் சிலை வீட்டில் இருக்கலாமா?ஏ.முருகன், காஞ்சிபுரம்வீட்டில் பைரவர் சிலை இருந்தால் அதற்குரிய பூஜை விதிமுறைகளை பின்பற்றுவது அவசியம். எளிமையான விநாயகர் வழிபாட்டை மட்டும் வீட்டில் வைத்து கொள்ளலாம். மற்ற தெய்வங்களை கோயிலில் வழிபடுவதே நல்லது.