உள்ளூர் செய்திகள்

கேளுங்க சொல்கிறோம்

சி.பவானி, திருவொற்றியூர்*குளிக்காமல் சுவாமி கும்பிடலாமா?காலையில் எழுந்தவுடன் கை, கால் கழுவி நெற்றியில் திருநீறு பூசலாம். இது சாதாரண நிலை. ஆனால் காலையில் விளக்கேற்றி பூஜை செய்பவர்கள், கோயில் வழிபாடு செய்பவர்கள் அவசியம் குளிக்க வேண்டும். வி.ராகவன், கன்னியாகுமரி*நவக்கிரகத்தை அதற்குரிய நாளில் தான் வழிபாடு செய்யணுமா?இல்லை. எந்த நாளிலும் செய்யலாம். குறிப்பிட்ட கிரகத்திற்கு பரிகாரம் செய்பவர்கள் அதற்குரிய கிழமை, நட்சத்திரங்களில் செய்ய வேண்டும். எடுத்துக்காட்டாக சூரியனுக்குரிய கிழமை ஞாயிறு, நட்சத்திரம் கார்த்திகை, உத்திரம், உத்திராடம்ஆர்.அச்சுதன், மதுரை*ஜென்ம சாபல்யம் என்றால் என்ன?பலன் என்பது ஒரு செயலால் விளையும் நன்மை, தீமையை குறிக்கும். இதிலிருந்து உருவான சொல்லே 'சாபல்யம்' என்பது. 'எண்ணியது பலித்தது' என்பது இதன் பொருள். ஜென்ம என்பது பிறவியைக் குறிக்கும். ஜென்ம சாபல்யம் என்பது பிறந்ததன் பலனை ஒருவர் அடைந்ததைக் குறிக்கும்.எஸ். விஜயா, கள்ளக்குறிச்சி *ஒருவருக்காக மற்றவர்கள் வழிபடலாமா?வழிபடலாம். நோயுற்ற ஒருவர் உடல்நலம் பெற குடும்பத்தினர், உறவினர், நண்பர்கள் வழிபடுவது இயல்பு. மற்றவர் நலனுக்காக சிலர் விரதமும் இருப்பர். கூட்டுப் பிரார்த்தனைக்கு உடனடி பலன் கிடைக்கும். கே.வீரலட்சுமி, ராமநாதபுரம் *பழி வாங்கும் எண்ணத்தால் அவதிப்படுகிறேன். விடுபட வழியுண்டா?பழி வாங்குதல் என்பது தவறான சிந்தனை. நம் மீது ஒருவர் கோபப்படுகிறார் என்றால் அவருக்குக் கோபத்தைத் துாண்டும் அளவுக்கு நம்மிடம் தவறு இருக்கலாம். திருத்திக் கொள்ளுங்கள். உங்கள் மீது தவறு இல்லாத நிலையில் ஒருவர் தீமை செய்தால் கடவுளிடம் சரணடையுங்கள். கே.வி.சுந்தரராஜன், பெங்களூரு*விரத நாளில் கோயிலில் தரும் பிரசாதத்தை சாப்பிடலாமா?சாப்பிட வேண்டாம். பசியைப் பொருட்படுத்தாமல் கடவுள் சிந்தனையுடன் இருப்பதே விரதம். குடும்பத்தினரிடம் அதைக் கொடுங்கள். கே.எல்.புனிதவதி, கோவை*ஒரே கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்யலாமா?கோத்திரம் என்பது குறிப்பிட்ட ரிஷியின் மரபில் வரும் பரம்பரையினர். எனவே அம்மரபில் வருபவர்கள் சகோதர சகோதரி முறை கொண்டவர்கள் என்பதால் திருமணம் செய்வது கூடாது.எம்.தேவி, கோவில்பட்டி *சுபநிகழ்ச்சியில் மாவிலை தோரணம் கட்டுவது ஏன்?சுபநிகழ்ச்சி நடக்கும் இடம் மங்களகரமாக இருக்க வேண்டும். அதற்காக மாவிலை, குருத்தோலை, வாழை, பாக்கு, இளநீர்க்குலை, நுங்குக்குலைகளால் திருமண வீடு, மண்டபத்தை அலங்கரிப்பர்.