உள்ளூர் செய்திகள்

மனப்பாடப்பகுதி

எண்மர் பதினொருவர் ஈரறுவர் ஓரிருவர்வண்ண மலர் ஏந்தி வைகலும்- நண்ணிஒருமாலை யால் பரவி ஓவாது எப்போதும்திருமாலைக் கைதொழுவார் சென்று.பொருள்: திருமாலே! வசுக்கள் என்போர் எட்டு. ருத்திரர் 11 பேர். ஆதித்தியர் 12 பேர், அசுவினி தேவர்கள் இருவர். இவ்வாறு விண்ணுலக தேவர்கள் பல எண்ணிக்கையில் உள்ளனர். இவர்கள் அனைவரும் நாள்தோறும் உன்னைப் பல வண்ண மலர்களால் பூஜிக்கின்றனர். இனிய பாடல்களைப் பாடியும் வணங்குகின்றனர். அப்படிப்பட்ட உன்னை நானும் வணங்குகிறேன்.குறிப்பு: பொய்கையாழ்வார் பாடல்