உள்ளூர் செய்திகள்

மனப்பாடப்பகுதி

மாலோன் மருகனை மன்றாடி மைந்தனை வானவர்க்குமேலான தேவனை மெய்ஞ்ஞான தெய்வத்தை மேதினியில் சேலார் வயற்பொழில் செங்கோடனைச் சென்று கண்டுதொழநாலாயிரம் கண் படைத்திலனே அந்த நான்முகனேபொருள்: திருமாலின் மருமகனே! அம்பலத்தில் ஆடும் சிவபெருமானின் மகனே! தேவர்கள் வணங்கும் மேலான தெய்வமே! உண்மை ஞானத்தை அருள்பவனே! நீர்வளம் மிக்க வயல்களும், சோலைகளும் சூழ்ந்த திருச்செங்கோட்டில் அருள்பவனே! உன்னைத் தரிசித்து மகிழ படைப்புக் கடவுளான பிரம்மா நாலாயிரம் கண்களை எனக்கு வழங்கவில்லையே! குறிப்பு: அருணகிரிநாதர் பாடல்