உள்ளூர் செய்திகள்

மனப்பாடப்பகுதி!

திருமகளே திருப்பாற்கடல் ஊடன்று தேவர்தொழவருமகளே உலகெல்லாமும் என்றென்றும் வாழவைக்கும்ஒருமகளே நெடுமால் உரத்தே உற்று உரம் பெரிதுதருமகளே தமியேன் தலைமீது நின்தாள் வையே.பொருள்: செல்வத்திருமகளே! தேவர்கள் வணங்க பாற்கடலில் இருந்த அமுத கலசத்துடன் வந்தவளே! உலகத்தை செல்வச் செழிப்பால் வாழ வைப்பவளே! திருமாலின் மார்பில் தங்கியிருப்பவளே! வெற்றியை அருள்பவளே! எளியவனான என் மீது உனது திருவடியை வைத்து அருள்புரிய வேண்டும்.குறிப்பு: வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் பாடிய திருமகள் அந்தாதி பாடல்.