உள்ளூர் செய்திகள்

மனப்பாடப்பகுதி!

ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப் புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனேபொருள்: ஐந்து கரம் கொண்டவரே! யானை முகம் கொண்டவரே! இளம் பிறை போன்ற தந்தம் உடையவரே! சிவபெருமானின் மகனே! ஞானக் கொழுந்தாக திகழ்பவரே! உம் திருவடியை என் மனதில் வைத்துப் போற்றுகிறேன்.குறிப்பு: திருமந்திரத்தில் உள்ள விநாயகர் வணக்கப்பாடல்