மனப்பாடப்பகுதி
UPDATED : மே 29, 2016 | ADDED : மே 29, 2016
பிறவித் துயரற ஞானத்துள் நின்றுதுறவிச் சுடர்விளக்கம் தலைப் பெய்வார்அறவனை ஆழிப் படையந் தணனைமறவியை இன்றி மனத்து வைப்பாரே!பொருள்: மீண்டும் மீண்டும் பிறப்பதால் வரும் தீமை நீங்கி வாழ வேண்டும் என விரும்புபவர்களே நிஜமான அறிவு பெற்றவர்கள். அவர்கள் உலக ஆசைகளில் சிக்கிக் கொள்ளாமல், ஒளிமிக்க கடவுளின் திருவடிக்கே தொண்டு செய்ய விரும்புவர். அத்துடன் தர்மத்தின் வடிவமானவரும், கையில் சக்கராயுதத்தை ஏந்தியவருமான திருமாலை மனதில் நினைத்துக் கொண்டே இருப்பார்கள்.குறிப்பு: நம்மாழ்வார் பாசுரம்