உள்ளூர் செய்திகள்

மனப்பாடப்பகுதி

பறக்கும் எம் கிள்ளைகாள் பாடும் எம் பூவைகாள்அறக்கண் என்னத்தகும் அடிகள் ஆரூரரைமறக்ககில் லாமையும் வளைகள் நில்லாமையும்உறக்கம் இல்லாமையும் உணர்த்த வல்லீர்களே.பொருள்: பறக்கும் கிளிகளே! பாடும் குயில்களே! தர்மத்தின் கண் என போற்றப்படுபவர் திருவாரூர் சிவபெருமான். அவரை மறக்க முடியாததால் என் உடல் மெலிந்து வளையல்கள் கழன்று விழுகின்றன. தூக்கம் இல்லாமலும் தவிக்கும் என் நிலையை அவருக்கு எடுத்து சொல்லுங்களேன்.குறிப்பு: சுந்தரர் தன்னை பெண்ணாக கருதி பாடிய தேவாரம்.