மனப்பாடப்பகுதி
UPDATED : ஜூலை 08, 2016 | ADDED : ஜூலை 08, 2016
ஊனில் மேய ஆவி நீ உறக்கமோடு உணர்ச்சி நீஆனில் மேய ஐந்தும் நீ அவற்றுள் நின்ற தூய்மை நீவானினோடு மண்ணும் நீ வளங்கடல் பயனும் நீயானும் நீ அதன்றி எம்பிரானும் நீ இராமனே!பொருள்: என் உயிரானவனே! நீயே உறக்கமாகவும், உணர்ச்சியாகவும் இருக்கிறாய். பசுவிடம் கிடைக்கும் பால், தயிர், நெய், சாணம், கோமியம் என்னும் பஞ்சகவ்யப் பொருளாகவும், அதன் புனிதத்தன்மையாகவும் இருப்பவன் நீயே. வானம், பூமி, கடல் என இயற்கையாக திகழ்பவனே! என் தலைவனாகிய ராமபிரானே! உன்னை வணங்குகிறேன்.குறிப்பு: திருமழிசை ஆழ்வார் பாடல்