மனப்பாடப்பகுதி!
UPDATED : செப் 05, 2016 | ADDED : செப் 05, 2016
மன்னன் தன் தேவிமார் கண்டு மகிழ்வு எய்தமுன் இவ்வுலகினை முற்றும் அளந்தவன்பொன்னின் முடியினைப் பூவணை மேல் வைத்துபின்னே இருந்து குழல் வாராய் அக்காக்காய்பேர் ஆயிரத்தான் குழல் வாராய்! அக்காக்காய்பொருள்: அழகிய காகமே! வாமன மூர்த்தியின் எழில் கண்ட மகாபலியின் மனைவி உள்ளம் மகிழ்ந்தாள். அந்தப் பெருமான் இந்த உலகம் முழுவதையும் தன் அடியால் அளந்தான். அவனது அழகிய தலைமுடியினை பூம்படுக்கையில் வைத்து, பின்புறமாக நின்று கூந்தலை வார வருவாயாக. ஆயிரம் திருநாமம் கொண்ட அந்தப் பெருமானுக்கு கூந்தல் வார வருவாயாக.குறிப்பு: பெரியாழ்வார் பாடல்