மனப்பாடப்பகுதி
UPDATED : அக் 14, 2016 | ADDED : அக் 14, 2016
பொன்னியல் கொன்றை பொறிகிளர் நாகம் புரிசடைத்துன்னிய சோதி யாகிய ஈசன் தொன்மறைபன்னிய பாடல் ஆடலன் மேய பரங்குன்றைஉன்னிய சிந்தை உடையவர்க்கு இல்லை உறுநோயே.பொருள்: பொன்னிறமான கொன்றைமலர் சூடியவரே! ஊர்கின்ற பாம்பினை ஜடாமுடியில் சூடியவரே! ஜோதி வடிவான தலைவரே! பழமை மிக்க வேதங்களால் போற்றப்படுபவரே! ஆடலில் சிறந்தவரே! திருப்பரங்குன்றத்தில் வீற்றிருப்பவரே! உம்மைச் சிந்தித்த அடியார்களைப் பிறவிநோய் தீண்டுவதில்லை.குறிப்பு: சம்பந்தர் தேவாரப்பாடல்