உள்ளூர் செய்திகள்

மனப்பாடப்பகுதி

வாது செய்து மயங்கும் மனத்தராய்ஏது சொல்லுவீர் ஆகிலும் ஏழைகாள்யாதோர் தேவர் எனப்படுவார்க்கெல்லாம்மாதேவன் அலால் தேவர் மற்றில்லையே.பொருள்: ஒருவருக்கொருவர் வாதிட்டு மன மயக்கத்திற்கு ஆளாகும் ஏழைகளே! நீங்கள் எதையும் பேசலாம். யாரை வேண்டுமானாலும் தெய்வம் எனக் கூறலாம். ஆனால் மகாதேவன் என்னும் சிவனைத் தவிர வேறு தெய்வம் உலகில் யாருமில்லை.குறிப்பு: திருநாவுக்கரசர் பாடிய பாடல்