மனப்பாடப்பகுதி
UPDATED : டிச 02, 2016 | ADDED : டிச 02, 2016
என்னிலாரும் எனக்கு இனியார் இல்லைஎன்னிலும் இனியான் ஒருவன் உளன்என்னுளே உயிர்ப்பாய்ப் புறம் போந்துபுக்குஎன்னுளே நிற்கும் இன்னம்பர் ஈசனே.பொருள்: என்னை விட எனக்கு இனிமை தருபவர் யாருமில்லை. ஆனால், என்னையும் விட இனிமையான ஒருவன் என்னுள் இருக்கிறான். அவன் என் உடம்பினுள் மூச்சாக மறைந்திருக்கிறான். அவனே என் அப்பனான சிவன். அவன் திருஇன்னம்பூர் என்னும் ஊரில் வீற்றிருக்கிறான்.குறிப்பு: திருநாவுக்கரசர் தேவாரப் பாடல். இந்தப்பாடலில் வரும் திருஇன்னம்பூர், கும்பகோணம் அருகில் உள்ளது.