மனப்பாடப்பகுதி!
UPDATED : ஏப் 10, 2017 | ADDED : ஏப் 10, 2017
பேராயிரம் பரவி வானோர் ஏத்தும்பெம்மானைப் பிரிவுஇலா அடியார்க்கென்றும்வாராத செல்வம் வருவிப்பானைமந்திரமும் தந்திரமும் மருந்தும் ஆகித்தீராநோய் தீர்த்து அருளவல்லான் தன்னைத்திரிபுரங்கள் தீ எழத் திண்சிலை கைக்கொண்டபோரானைப் புள்ளிருக்கு வேளூரானைப்போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே! (நோய் தீர்க்கும் அப்பர் தேவாரம்)பொருள் : தேவர்களால் ஆயிரக்கணக்கான பெயர்களால் புகழப்படும் சிவனே! உன்னை மறக்காத பக்தர்களுக்கு கிடைப்பதற்கரிய பிறப்பற்ற நிலை அருள்பவனே! நோய் தீர்க்கும் மந்திரமாகவும், தந்திரமாகவும், மருந்தாகவும் விளங்குபவனே! தீராத நோய் தீர்த்தருளும் வல்லவனே! அசுரர்களின் மூன்று கோட்டைகளை எரிக்க வில் ஏந்தியவனே. புள்ளிருக்கு வேளூர் எனப்படும் வைத்தீஸ்வரன் கோவிலில் வீற்றிருக்கும் வைத்திய நாதனே! உன்னை இத்தனை நாளும் நினைக்காமல் வீணாக பொழுதைக் கழித்து விட்டேனே!