உள்ளூர் செய்திகள்

மனப்பாடப்பகுதி!

ஆசைக்கடலில் அகப்பட்டு அருளற்ற அந்தகன் கைப்பாசத்தில் அல்லல் பட இருந்தேனை நின் பாசம் என்னும்வாசக்கமலம் தலை மேல் வலிய வைத்து ஆண்டு கொண்டநேசத்தை என் சொல்வேன் ஈசர் பாகத்து நேரிழையே.(அபிராமி பட்டரின் அபிராமி அந்தாதி பாடல்)பொருள்: சிவனின் இடப்பாகத்தில் வீற்றிருப்பவளே! ஆசை என்னும் கடலில் சிக்கியதால், கருணையற்ற எமனின் பாசக்கயிற்றுக்கு பலியாக இருந்தேன். ஆனால் உன் நறுமணம் மிக்க தாமரை திருவடிகளை என் தலை மீது வலிய வைத்து ஆட்கொண்டாய். உன் அருளை சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை.