மனப்பாடப்பகுதி
UPDATED : ஆக 25, 2015 | ADDED : ஆக 25, 2015
தாளை என் சென்னியின் மேல் நீ வைத்தால் வெம் தரணிமுதல்கோளை வன்தீவினைப் பேயோடு வென்று குலாவுவன் காண்வாளை ஒப்பாம் விழியால் நெடுமாலை மயக்கி அப்பால்வேளை நல்கிப் பல் உலகோரும் வாழச் செய் மின்கொடியே.பொருள்: ஒளி வீசும் கொடி போன்றவளே! உலக உயிர்களுக்கு நல்வாழ்வு தரும் லட்சுமியே! நெடியவன் திருமாலை, வாள் போன்ற கண்களால் மயக்குபவளே! உன் திருவடிகளை என் தலை மேல் வைத்தால், கொடிய தீவினை என்னும் பேயை வென்று மகிழ்வுடன் வாழ்வேன்.குறிப்பு: வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமி எழுதிய திருமகள் அந்தாதி பாடல்.