மனப்பாடப்பகுதி!
UPDATED : செப் 01, 2015 | ADDED : செப் 01, 2015
பார்த்தனுக்கு அன்றருளிப் பாரதத்தொரு தேர்முன்நின்றுகாத்தவன் தன்னை விண்ணோர் கருமாணிக்க மாமலையை தீர்த்தனைப் பூம்பொழில்சூழ் திருமாலிருஞ் சோலைநின்றமூர்த்தியைக் கைதொழவும் முடியுங்கொல் என் மொய்குழற்கே.பொருள்: பாரதப் போரில் அர்ஜுனன் தேர்ச் சாரதியாக வந்தவனே! பாண்டவர்களைக் காத்தவனே! விண்ணோர் போற்றும் கருமை நிற கண்ணனே! மாணிக்க மலையே! தூய்மை மிக்கவனே! திருமாலிருஞ்சோலை (அழகர்கோவில்) என்னும் திவ்யதேசத்தில் அருள்பவனே! உன்னை தரிசித்து வணங்கும் பேறு என்று தான் கிடைக்குமோ?குறிப்பு: திருமங்கையாழ்வார் பாடல்.