சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!
UPDATED : மே 11, 2016 | ADDED : மே 11, 2016
1. பாற்கடலில் அவதரித்த திருமகளின் பெயர்.......ஆதிலட்சுமி2. லட்சுமி வாசம்(தங்குதல்) என்று பெயர் பெறும் மரம்.......வில்வம்3. மகாலட்சுமியைப் போற்றும் வேத மந்திரம்.....ஸ்ரீசூக்தம்4. குபேரனின் கிரீடத்தில் குடியிருப்பவள்.......மகுட லட்சுமி5. நிகமாந்த தேசிகர் லட்சுமி மீது பாடிய ஸ்தோத்திரம்......ஸ்ரீ ஸ்துதி6. குபேரனின் அருகில் வீற்றிருக்கும் இருவர் ........சங்கநிதி, பதுமநிதி7. பார்கவ முனிவரின் மகளாகப் பிறந்த லட்சுமி......பார்கவி8. மகாராஷ்டிராவில் புகழ் மிக்க லட்சுமிதலம்......கோலாப்பூர்9. கோவில்களில் நடனமிடும் லட்சுமி சிற்பம் அமைத்த மன்னர்கள்........ஹோய்சாளர்கள்10. திருப்பதிக்கு செல்லும் முன் தரிசிக்க வேண்டிய கோவில்.....திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில்