உள்ளூர் செய்திகள்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

* கடவுள் வழிபாடு, பூஜை முதலிய செயல்களை கிழக்கு (அ) வடக்கு நோக்கிச் செய்ய வேண்டும். * வளர்பிறை ஏகாதசியன்று கிருஷ்ணருக்கு அவல், பொரி, பாயசம் வைத்து வழிபட்டால் இழந்த பொருட்களை பெறலாம். * வீட்டைக் காப்பது நிலைப்படி. அதனால்தான் அதை கடவுளாக கருதி மஞ்சள், குங்குமம் இட்டு வழிபடுகிறோம். * திட்டமிடாமல் வாழ்ந்தால் பின்னாளில் கஷ்டப்படுவீர்கள். * பெரியோரை வணங்குவோருக்கு ஆயுள், அழகு, இன்பம், வலிமை ஆகியவை கூடும். * தந்தையின் நட்சத்திரத்தில் மகனும், தாயின் நட்சத்திரத்தில் மகளும் பிறக்க கூடாது. * உங்கள் வீட்டில் இருக்கும் பெண் கர்ப்பமாக இருக்கும்காலத்தில் கிரகதோஷ பரிகாரம் எதுவும் செய்ய வேண்டாம். * தனக்கு கல்வியை கற்றுக் கொடுத்த குருவின் மகளைத் திருமணம் செய்யக்கூடாது. * ஒரு தமிழ் மாதத்தில் இரண்டு அமாவாசையோ, இரண்டு பவுர்ணமியோ வந்தால் அது 'மலமாதம்' எனப்படும். இந்த மாதத்தில் சுபநிகழ்ச்சி வைக்கக்கூடாது. * கஜானாவில் மல்லிகைப்பூ வைத்தால் மிகவும் நல்லது. * பழமையான கோயில்களுக்கு மகான்கள் வந்து சென்றிருப்பதால், நாம் அங்கு செல்வதால் வாழ்வு சிறக்கும்.