உள்ளூர் செய்திகள்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!

1. கிருஷ்ணரின் பெற்றோரான வசுதேவர் தேவகியின் தந்தையர் யார்?வசுதேவரின் தந்தை சூரசேனன், தேவகியின் தந்தை தேவகர்2. கம்சனின் தந்தை யார்?உக்கிரசேனன்3. தேவகியை வசுதேவர் திருமணம் செய்தபோது, தேவகியின் தந்தை கொடுத்த சீர்வரிசை எவ்வளவு?தங்க மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட 400 யானைகள், 15 ஆயிரம் குதிரைகள், 18 ஆயிரம் ரதங்கள், 200 பணிப்பெண்கள்.4. கிருஷ்ணரின் வளர்ப்புத் தந்தை, தாய் யார்?நந்த மகாராஜா, யசோதை5. பிராமணர்களுக்கு கிருஷ்ணர் தினமும் தானமாக அளித்த பசுக்களின் எண்ணிக்கை என்ன?13 ஆயிரத்து 846. கிருஷ்ணர் அரசாண்ட நகரம் எது?துவாரகாபுரி (குஜராத்)7.கிருஷ்ணரின் அத்தை யார்?குந்திதேவி (கிருஷ்ணரின் தந்தையான வசுதேவரின் சகோதரி)8. கிருஷ்ணரின் நண்பர் குசேலரின் நிஜப்பெயர் என்ன?சுதாமா9. குசேலரின் மனைவி யார்? சுசீலை10. 'குறையொன்றுமில்லை மறை மூர்த்தி கண்ணா' பாடலை எழுதியவர் யார்? ராஜாஜி.