உள்ளூர் செய்திகள்

இந்த வார ஸ்லோகம்!

ஸிவாய கௌரீ வதனாப்ஜ வ்ருந்தஸூர்யாய தக்ஷாத்வர நாஸகாய!ஸ்ரீநீலகண்டாய வ்ருஷத் த்வஜாயதஸ்மை ஸிகாராய நம:ஸிவாய!பொருள்: மங்களம் நிறைந்தவரே! கவுரிதேவியின் தாமரை முகத்தை மலரச் செய்யும் சூரியனே! தட்சனின் யாகத்தை அழித்தவரே! விஷம் தங்கிய நீலகண்ட பெருமானே! ரிஷபக் கொடி உடையவரே! நமசிவாய என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தின் வடிவமாகத் திகழ்பவரே! பரமேஸ்வரரே! உம்மை வணங்குகிறேன்.குறிப்பு: சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரத்தில் உள்ள ஸ்லோகம்