இந்த வார ஸ்லோகம்!
UPDATED : ஏப் 06, 2017 | ADDED : ஏப் 06, 2017
ஹே பூதநாத பகவன் பவதீயசாருபாதாம்புஜே பவது பக்திரசஞ்சலாமே!நாதாய ஸர்வ ஜகதாம் பஜதாம் பவாப்திபோதாய நித்ய மகிலாங்க புவே நமஸ்தே!!(தர்மசாஸ்தா துதி தசக ஸ்தோத்திர ஸ்லோகம்)பொருள்: பூதங்களின் தலைவனே! உமது அழகிய திருவடிகளில் எங்களுக்கு இடைவிடாத பக்தி உண்டாகட்டும். பிறவிக்கடலைக் கடக்க உதவும் தோணியே! சூரியன், சந்திரன், வருணன், பூமி, அக்னி, வாயு, ஆகாயம் ஆகியவற்றைத் தன் உடம்பில் பாகமாகக் கொண்ட சிவனின் புதல்வனே! உம்மை வணங்குகிறேன்.