உள்ளூர் செய்திகள்

இந்த வாரம் என்ன

அக்.22, ஐப்பசி 5: ராமேஸ்வரம் பர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளல், கீழ்த்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் திருமஞ்சனம், சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம், உத்திரமாயூரம் வள்ளலார் சன்னதியில் சந்திரசேகரர் புறப்பாடு.அக்.23, ஐப்பசி 6: கார்த்திகை விரதம், உமா விரதம், சந்திரோதய கவுரி விரதம், காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள், ஸ்ரீரங்கம் நம்பெருமாள், திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் திருமஞ்சனம், திருச்செந்துார் முருகன் பவனி, திருநெல்வேலி காந்திமதியம்மன் இரவு கமல வாகனம், கரிநாள்அக்.24, ஐப்பசி 7: முகூர்த்த நாள், சங்கடஹர சதுர்த்தி விரதம், மன்னார்குடி ராஜகோபாலசுவாமி புறப்பாடு, உத்திரமாயூரம் வள்ளலார் சன்னதியில் சந்திரசேகரர் புறப்பாடு, திருநெல்வேலி காந்திமதியம்மன் இரவு சிம்ம வாகனம்அக்.25, ஐப்பசி 8: சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம், கீழ்த்திருப்பதி கோவிந்தராஜப்பெருமாள் சன்னதியில் கருடாழ்வார் திருமஞ்சனம், திருநெல்வேலி காந்திமதியம்மன் ரிஷப வாகனம்அக்.26, ஐப்பசி 9: ஸ்ரீபெரும்புதுார் மணவாள மாமுனிகள் உடையவருடன் பவனி, சுவாமிமலை முருகன் ஆயிரநாமாவளி கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல், சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் ஆண்டாள் திருமஞ்சனம்அக்.27, ஐப்பசி 10: முகூர்த்த நாள், பத்ராசலம் ராமர் புறப்பாடு, திருப்பதி ஏழுமலையான் சகஸ்ர கலசாபிஷேகம், சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிகோயிலில் நரசிம்மர் திருமஞ்சனம், திருநெல்வேலி காந்திமதியம்மன் அன்ன வாகனம்அக்.28, ஐப்பசி 11: சுவாமிமலை முருகன் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம், வாஸ்து நாள், பூஜை நேரம்: காலை 7:44 - 8:20 மணி, திருமயம் சத்தியமூர்த்தி பவனி, திருநெல்வேலி காந்திமதியம்மன் தவழும் கண்ணன் திருக்கோலம், சக்திநாயனார் குருபூஜை