இந்த வாரம் என்ன
மார்ச் 25, பங்குனி 11: திருவெள்ளறை சுவேதாத்திரிநாதர் காலை அன்ன வாகனம், இரவு யானை வாகனம். ஒப்பிலியப்பன் கோவில் சீனிவாசப்பெருமாள் பல்லக்கில் புறப்பாடு, ஸ்ரீபெரும்புதுார் மணவாள மாமுனிகள் பவனி, மன்னார்குடி ராஜகோபால சுவாமி ராமர் திருக்கோலம், ராமேஸ்வரம் பர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளல், சங்கரன் கோவில் கோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம்.மார்ச் 26, பங்குனி 12: மன்னார்குடி ராஜகோபால சுவாமி கண்ட பேரண்ட பட்சியில் பவனி, சென்னை சென்னமல்லீஸ்வரர் விடையாற்று உற்ஸவம், ஒப்பிலியப்பன் கோவில் சீனிவாசப்பெருமாள் சூர்ணாபிஷேகம், திருவெள்ளறை சுவேதாத்திரிநாதர் பூந்தேரில் பவனி. சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிபெருமாள் கோயிலில் வரதராஜர் திருமஞ்சனம், குச்சனுார் சனிபகவான் சிறப்பு ஆராதனை.மார்ச் 27, பங்குனி 13 : திருவோண விரதம், சீதாதேவி விரதம், திருவெள்ளறை சுவேதாத்திரிநாதர் குதிரை வாகனத்தில் பவனி. மன்னார்குடி ராஜகோபால சுவாமி ராஜாங்க அலங்காரம், ஒப்பிலியப்பன் கோவில் சீனிவாசப்பெருமாள் வேடுபறி உற்ஸவம். கீழ்த்திருப்பதி கோவிந்தராஜப்பெருமாள் சன்னதி எதிரில் அனுமன் திருமஞ்சனம்.மார்ச் 28, பங்குனி 14 : மன்னார்குடி ராஜகோபால சுவாமி ரிஷிமுக பர்வத பட்டாபிராமர் திருக்கோலம், சென்னை சென்னமல்லீஸ்வரர் விடையாற்று உற்ஸவம், திருவெள்ளறை சுவேதாத்திரிநாதர் தேர், ஒப்பிலியப்பன் கோவில் சீனிவாசப்பெருமாள் தேசிகருடன் எழுந்தருளல், இரவு புஷ்பாங்கி சேவை, ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள், ரங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.மார்ச் 29, பங்குனி 15: தாயமங்கலம் முத்துமாரியம்மன் உற்ஸவம் ஆரம்பம், மன்னார்குடி ராஜகோபால சுவாமி சிம்ம வாகனத்தில் ராஜாங்க அலங்காரம். ஒப்பிலியப்பன் கோவில் சீனிவாசப்பெருமாள் சப்தாவர்ணம், தொட்டியம் காளியம்மன் தேர், திருப்பதி ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். சிவாலயங்களில் மாலையில் நந்தீஸ்வரர் வழிபாடு, தண்டியடிகள் நாயனார் குருபூஜை.மார்ச் 30, பங்குனி 16: மாத சிவராத்திரி. மன்னார்குடி ராஜகோபால சுவாமி வேணுகோபாலன் திருக்கோலம், தாய மங்கலம் முத்துமாரியம்மன் சிம்ம வாகனம், சென்னை சென்னமல்லீஸ்வரர் நடனக்காட்சி, திருவெள்ளறை சுவேதாத்திரிநாதர் ஆடும் பல்லக்கில் பவனி, ஒப்பிலியப்பன் கோவில் சீனிவாசப்பெருமாள் விடையாற்று உற்ஸவம். சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப்பெருமாள் கோயிலில் நரசிம்மர் திருமஞ்சனம்.மார்ச் 31, பங்குனி 17: சர்வ அமாவாசை, மன்னார்குடி ராஜகோபால சுவாமி பரமபதநாதர் திருக்கோலம், தாயமங்கலம் முத்துமாரியம்மன் சிம்ம வாகனம், ஒப்பிலியப்பன் கோவில் சீனிவாசப்பெருமாள் அலங்கார படிச்சட்டத்தில் பவனி. திருக்கண்ணபுரம் சவுரிராஜப்பெருமாள் விபீஷண ஆழ்வார்க்கு நடையழகு சேவை, சுவாமிமலை முருகன் தங்கக்கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.